பக்கம்:சீதைக்கு ஒரு பொன்மான்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

123


சொன்னேன்; அதோட உண்மை உனக்குப் புரியல்லே; எனக்கும் விளங்கல்லே. உன்னை உரிச்சு வச்சாப்பிலே ஒரு பெண் குழந்தை பிறந்திருந்தால், என்ைேட மனசுக்கு ஒரு ஆறுதலாக இருந்திருக்குமோன்னு இப்போது தோணுது' அப்படின்னு சொன்னேனே நான்?...என் ஆசைப்படி நடந் திருந்தால் உன்னைப்போல ஒரு பெண்ணை நீ பெற்று எனக்குத் தந்திருந்தால், நான் அந்தப் பெண்குழந்தையில் உன்னே அல்லும் பகலும் தரிசனம், செஞ்சு இன்றைக்கு எத்தனையோ ஆறுதலை அடைஞ்சிருப்பேனே?...ஐயையோ, அ:ே

அத்தான் சுந்தரின் கண்ணிர்ப் பூக்களைப் பூ விரல்களால் கொய்து நுகர்ந்தாள் மைத்துணி சுமதி. முதுகுப் பக்கத்தி லிருந்து முன்பக்கம் வந்து நின்ருள். அத்தான், உங்களோட நேர்மையான ஆசையும் நியாயமான கனவும் பலிக்கிற காலம் நெருங்கிகினு இருக்குதுங்க; நான் உங்களுக்குப் பெண்ணுகப் பெற்றுத் தந்திடறேனுங்க, அத்தான்! அக்கா வந்து என் வயிற்றிலே பிறக்கப் போகுதுங்க! அப்புறம் சதாசர்வ காலமும் நீங்க அக்காவையே பார்த்துகிட்டே இருக் கலாமுங்க, அத்தான்!’ என்று அழுத்தமாகக் கூறினள்.

சுமதியை விழுங்கி விடுவதுபோன்று ஊடுருவிப் பார்த்தான். நிஜமாகவா சுமதி?...நான் என் சுசீயைத் திரும்பவும் தரிசிக்க முடியுமா? அப்படியானல் நான் பாவி யல்ல; அதிர்ஷ்டக் கட்டையும் அல்ல!' என்று உருகிக் கரைந்தான். அப்படியானல், நம்ப கல்யாணத்துக்கு எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரமாகத் தேதி வைக்க ஏற்பாடு பண்ணிப்பிடு, சுமதி,' என்று வேண்டிக் கொண்டான் சுந்தர்.

சுமதிக்கு வெட்கமான வெட்கம்.

சொல்லிவைத்த விதமாக, அப்போது பிரம்மறு: ஸோமாஸ்கந்த சாஸ்திரிகள் கம்பீர மிடுக்குடன் வந்து சேர்ந்தார்; உங்க கல்யாணத்துக்குப் பங்குனி பதினைந்து