பக்கம்:சீதைக்கு ஒரு பொன்மான்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

139


நான் எழுதினதை, நான் உணர்ந்து எழுதினதைத் திரும்பச் சொல்றேன். காதல் என்கிறது. பொன்மான்கூட இல்லை!அது ஒரு பொய்மான்!...என் திட்டத்துக்கு மாத்திரம் மிஸ்டர் குமார் ஒ. கே. சொல்லிவிட்டால், அப்பால், குமாரி கட்டாயம் புனர் ஜன்மம் எடுத்திடுவாருங்க!-என்னை நம்புங்க, அத்தான் ஆன, ஒண்ணு. அவர் உயிரும் உடம்புமாக, நல்லபடியாக இங்கே வந்து சேரவேணும்!”

சுமதிதான் இப்படியெல்லாம் பேசுகிருளா?

  • குமார்தான் இதுவரை வரல்லே, உன் உயிர்ச்சிநேகிதி மிஸ் சுஜாதாவையும் காணுேமே, சுமதி?”

“நல்ல காரியத்துக்கு நானுாறு தடங்கல்னு ஒரு பேச்சுப் பேசுவாங்க, ஊர் உலகத்திலே! ஆனல், எந்தச் சூரியன் எங்கே மறைய மறந்தாலும், என் சுஜா கிளி இங்கே வந்து குதிக்க ஒருநாளும் மறக்கவே மாட்டாள், அத்தான்!”

சுந்தர் தொண்டையைக் கனைத்துக் கொண்டான். 'சுமதி, உன் அக்கா என்னை உன் கையிலே ஒப்படைச் சதாட்டம், நீ குமாரை சுஜாதாகிட்டே ஒப்படைச்சால் தான், எனக்குப் பூரணமான அமைதி ஏற்பட வாய்க்கும்!”

சுந்தர் இப்போதுதான் கை கழுவுகிருன். தாம்பூலம் மடித்துக் கொடுத்தாள் சுமதி. வாசலில் டாக்ஸி சத்தம் கேட்டது.

பாய்ந்தாள் சுமதி. வீதியில் இரண்டு வாடகைக்கார்கள் நின்றன.

  • வாங்க குமார்!...வாடி, சுஜா!'