பக்கம்:சீதைக்கு ஒரு பொன்மான்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138


புரியல்லையே?’ என்று நினைவுபடுத்திக்கொண்டு நினைவூட்டிய

வன் சாட்சாத் சுந்தர்.

"அது தாங்க எனக்கும் மட்டுப்படக் காணுேம்; பாவம்,

குமார்!-உடம்புக்கு வந்திடுச்சோ, என்னமோ?”

சுந்தர் அவளே உன்னிப்பாக உறுத்துப் பார்த்தவாறு, 'குமாருக்கு உடம்புக்கு என்ன கேடு? உள்ளத்துக்குத் தானே கேடுவந்திச்சு?...பாவம், குமார்!’ என்று வருந்தினன்.

அத்தானின் இரக்கச் சிந்தை அவளுக்குப் புரியாதா?

'சுமதி, உன்னை ஒன்று கேட்டாகணும். நீயும் குமாரும் அந்தரங்கமாகவும் அத்யந்தமாகவும் ஒருத்தரை ஒருத்தர் காதலிச் சீங்க; ஆனால், அந்தக் காதல் ஈடேறல்லே. குமார்-மிஸ்டர் குமார் மனசொடிஞ்சு போயிட்டார். தர்க்க நியாயப் பிரகாரம், அதே ஏக்கம், அதே மனநோய் உன் பங்குக்கும் ஏற்பட்டிருக்கும்தானே, சுமதி?”

அவள் இப்போது சுந்தரை ஊடுருவி உறுத்துப் பார்வை யிட்டாள். பிறகு, பேசலாளுள். அத்தான், நீங்க சொன்ன மாதிரி குமாருக்கு-மிஸ்டர் குமாருக்கு ஏற்பட்டிருக்கிறது தான் மனநோய். ஆன, எனக்கு ஏற்பட்ட காதல் தோல்வியிலே என் மனசு ஏக்கம் அடையாமல் இல்லைதான். ஆலுைம் அந்த ஏக்கத்தைத் துச்சமாக மதிக்கும்படியாகச் செஞ்சிட்ட புண்ணியம் அக்கா எனக்கு இட்ட அந்த ஆணையையே சேருமுங்க, அத்தான்!...அந்த ஆணைதான் எனக்கு எல்லாமாகத் தெரிஞ்சுதுங்க; அந்தக் கட்டளைதான் எனக்குச் சகலமுமாகத் தோணுச்சு; தோணுது; என் லட்சியக் கனவு தேவி கருமாரியோட கருணையினலே-என் அன்புத் தெய்வம் சுசீயோட மகிமையினலே நாளைக்கு பலிச்சிட வேளை பார்த்துக்கினு இருக்குதுங்க!...”

சுந்தர் ஸ்தம்பித்தான்.

‘அத்தான், அன்னிக்குக் குமாருக்கு எழுதின லெட்டரை உங்க கையிலே காட்டினேனே, நினைப்பு இருக்குதுங்களா?