பக்கம்:சீதைக்கு ஒரு பொன்மான்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

137


  • இன்னும் ஒரு பிடி சோறுங்க?" 'அம்மாடியோவ்! வயிறு வெடிச்சிடும்.'
ஐயையோ, வயிறு வெடிச்சிட்டால், அப்பறம் என் கதி என்னுவது? ராஜா கதி என்னுகும்?...'

எதிர்த் தரப்பில் விளையாடிய அன்பு அவனைத் திக்குமுக்காடச் செய்திருக்கலாம். "சும்மா விளையாட்டுக் கோசரம் சொன்னல், இப்படியா ஒரு மறத்தமிழச்சி பயந்து சாவாள்?...ஐயையோ, சாகவேணும்! இப்படியா பயப் படுவாள்?’ என்று நையாண்டி செய்தான் சுந்தர்.

'எனக்கென்னமோ,என் வாழ்க்கை ஒரு சொப்பனமாட் டம்தான் சதா சர்வகாலமும் தோணிக்கிட்டு இருக்குதுங்க, அத்தான்!”

"இருக்கட்டுமே! சொப்பனம் என்கிறது மனசோட நினைவின் பிரதிபலிப்புத்தானும்! காலம்பறப் படிச்சேன், சுமதி:

"ஓஹோ!” அதிசயம் பாலேடாக இனித்தது. 'இந்தாங்க, கடியுங்க!...” என்று பேச்சைப் பாதியில் நிறுத்தினுள் சுமதி.

அதற்குள், அவன் அவள் கையைக் கடிக்க முற்படுவதற்குள் அவள் சாகசத்தோடும் சாதுர்யத்துடனும் பிளேட்டில் ஆட்டுக்கால் எலும்புத் துண்டங்களைப் போட்டு விட்டாள். .

அளவுக்கு மீறினால், அமிர்தமும் விஷமாகலாம்!ஆன லும் அவனுக்கு அமுதத்தையும் நஞ்சையும் பதம் பார்த்தும் பழக்கம் இல்லை; அளவுக்கு மீறினல் அன்பு அமிர்தமாகு மென்ற யதார்த்த அனுபவம் அவனுக்குப் பெருமையாக இருந்தது, சுசீ, எல்லாம் நீ இட்ட பிச்சையம்மா!.. கண்ணிர், சிரிப்பிலே கரைசேர்கிறது; கரைகிறது. இனி நாம நம்மோட மண்ணுக்குத் திரும்பலாம்; ஆமா, குமா இன்னும்கூட வரவில்லையே?-என்ன சங்கதியென்றே