பக்கம்:சீதைக்கு ஒரு பொன்மான்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136


துங்களே?’ என்று பாசத்தின் பரிவுடன் சொல்லிக் கொண்டே, சூப் நிரம்பிய மங்குக் கோப்பையை அன்பின் ஆதுரத்துடன் அவனுடைய வாயில் வைத்தாள் உரிமைக் காரி. அவள் பயந்ததுபோல் அவன் இடக்காக எதுவும் சொல்லாமலிருந்தது அவளுக்கு எவ்வளவோ ஆறுதலை வழங்கியது. பேச்சு மூச்சில்லாமல், ஆளுல் மூச்சின் பேச்சு மட்டிலும் ஒலிக்க, எதிரொலிக்க அவன் மலர்ச்சியுடன் சூப்பை ஒரேவாயில் குடித்து முடித்த அதிசயம் அவளை ஆனந்தக் கடலாடச் செய்தது. சரி; சோற்றைப் பிசை யுங்க, கறிக் குழம்பைச் சேர்த்து வசமாகப் பிசையுங்க, அத்தான். அடடே, ஆட்டுக் கொழுப்பு ஆறிப்போல்ை கெட்டிபாய்ஞ்சிடும். அதை முதலிலே வாயிலே போட்டுக் கங்க!' என்று யோசனை சொன்னுள்.

யோசனை செய்யாமல் ஆட்டுக் கொழுப்பை ருசிபார்த்துச் சுவைத்தவகை, சோறு வேறே சாப்பிட வேணுமா, சுமதி?’ என்று சவலைக் குழந்தையின் ஏக்கத்துடன் கெஞ்சினன் S.Gð) L-ii_Í SÍ GNT.

சோறு சாப்பிட்டாத்தான் உடம்புக்கு பலம் வரும்!”

"அப்படியான, இப்ப தின்னேனே கொழுப்பு, அதாலே ஒரு புண்ணியமும் இல்லையா?”

'இல்லாமல் என்ன? ஆனாலும், சோற்றுக்கென்று ஒரு தனிப் பலம் உண்டாக்கும்!”

"இருக்கிற பலம் போதுமே, சுமதி:

"அப்படிங்களா?’’

பின்னே?...'

‘ஐய்ய!...போதும், போதும்.விட்டுடுங்க!...ராஜாதான் துரங்குருன்; அம்மா தூங்கல்லே!'

அவன் வெட்கம் அவள் வெட்கத்தில் காற்று வாங்கியது.