பக்கம்:சீதைக்கு ஒரு பொன்மான்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

135


கிருன்!-ராஜா என் கிட்டே பால் குடிக்கத் தவிச்சுத் தவம் கிடக்கிருன், பாவம்'...அந்தப் பாக்கியம் அவனுக்கு எப்போது கிடைக்கப் போகுதோ?

அம்மா எதிரே நின்ருள். என்னடி சுமதி, இன்னமுமா உன் கனவு கலையல்லே?” என்று அதிகாரமாகக் கேட்டாள். மகள் முகம் மாறித் தன்னைத் திரும்பிப் பார்த்ததும், 'துரங்குற பாப்பாவைக் கிடத்திட்டு, உன் புருஷனைஅத்தானை அழைச்சிட்டு வந்து சோற்றைப் போடுடி, சுமதி: என்று கெஞ்சிள்ை தெய்வநாயகி.

அவ்வாறே பணிந்தாள் சுமதி. இன்னமுமா உன் கனவு கலையல்லே?-அம்மா என்ன பொருளில் அப்படிப் பறைந் தாள்? சாதாரணமாகப் பேசிளைா? இல்லை, பொடி வைத்துப் பூடகமாகச் சொன்னளா? நான் இனி ஏன் கனவு காணப்போகிறேன்? என் கனவுதான் பலித்து விட்டதே?... நாளைக்கு விடிந்ததும் விடியாததுமாகப் பலிக்கப் போகிறதே?...ஒருவேளை, பழைய பொய்க் கனவைக் குத்திக் காட்டியிருப்பாளோ?-ஊகூம், அம்மா நல்லமாதிரி. மின்மைல் முழங்காமல் இடி இடிப்பது மாதிரி சம்பூர்ண இராமாயணத்தில் பார்த்த ஒரு காட்சி அவள் மனத்திரை யில் படம் விரித்தது. பாவம், சீதை...இருந்திருந்து கேவலம் ஒரு பொய் மானுக்காக அப்படி ஆசைப்பட்டிருக் கிருளே? அந்த ஆசைதான் அவளுக்கு வாய்த்த விதியாக அமைந்ததோ?-துரசு விழவில்லே, கண்களில்! ஆளுல் கண்கள் எரிந்தன!-பெருமூச்சை நெட்டித் தள்ளிள்ை; அடுப்படிக்கு அடிபெயர்ந்தாள்; அத்தானுக்குப் பன் தெரியாது; போய் ஞாபகப் படுத்தவேண்டும்.

சாப்பாடு தயார்,

சுந்தர் சாப்பிடத் தயார்.

"அத்தான், முதலிலே குப்பைக் குடியுங்க; அப்பறம் ஆறிப்போயிடும்; ஆறினுல்தான் உங்களுக்குப் பிடிக்கா