பக்கம்:சீதைக்கு ஒரு பொன்மான்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134


வயிற்றுப் போக்கும் கண்டது, பிள்ளை சோர்ந்து போய் விடவே, தம்புச் செட்டித் தெருவில் இருந்த டாக்டர் உசோதாவிடம் குழந்தையைக் காண்பித்தார்கள், டாக்ட ரிடம் உள்ள நாடிக்குழல் அற்ப சொற்பமானதல்ல; எமன் கையிலிருப்பதாக வர்ணிக்கப்படும் பாசக் கயிறு உயிர்களை வாங்குமாம்; இதுவும் ஒருவகையில் பாசத்தின் கயிறு போலத்தான். ஆனால், உயிர்களைத் திரும்பக் கொடுக்க வல்லது. ராஜா தப்பி விட்டான் தாயே, அங்காள பரமேஸ்வரி!...

ராஜா பாலூட்டியிலிருந்து சப்பிய பாலை உள்ளே இறக்காமல் வாயில் பீச்சியடித்துக் கொண்டிருக்கிருன்!

சுமதிக்குக் கலவரம் நீங்கிய அமைதி ஏற்பட்டபோது, அவளால் சிரிப்பைத் தவிர்க்க முடியவில்லைதான். பிள்ளையை ஏந்தினுள் ஏந்திழை, ஆகாரம் புகட்ட ஆரம்பித்தாள், ஒரு தரம் ரப்பரைக் குதப்பியவன், மறுமூச்சில் பாலைச் சுவைத்துப் பருகத் தொடங்கினன். அவளுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை.‘அப்படின்ன ராஜாவுக்கு அம்மாவையும் என்னை பும் வித்தியாசப் படுத்திப் பார்க்கப் புரிஞ்சிருக்குதுன்னு அர்த்தமா?...அதுசரி; ஆல்ை, எனக்கும் அக்காவுக்கும் அவளுலே வேறுபாடு காண முடியுமா? எப்படி அவனுலே அந்த உண்மையைப் புரிஞ்சுக்கினு தெளிய முடியும்? தன்னைப் பெற்ற அம்மா வேறே, நான் வேறே என்கிற நியாயத்தை அவன் அறிஞ்சுக்கிட ஆரம்பிச்சா...!ஐயையோ, நினைக்கவே குலே நடுங்குது!...அக்கா, நீயும் நானும் ஒண்ணே தானே?-நீயும் நானும் ஒண்ணுதான்னு நம்ப ராஜாக்குட்டிக்குப் படிச்சுக் கொடுத்திடு, அக்கா!' நெஞ்சு ஏறி ஏறி இறங்கியது. குழந்தையைக் கனிவுடன் நோக்கிள்ை. அது கைகொட்டிச் சிரிக்கக் கண்டதும், தலை கால் புரியாத ஆனந்தம் ஏற்பட்டது. "ஆஹா!...என்னையே தன் தாயாராக நினைச்சிருக்கக் கண்டுதான், என் தங்கம் ராஜாவாலே இவ்வளவு அமர்க்களமாகச் சிரிக்க முடியுது” மார்பகத்தில் திடீரென்று ஒர் இன்ப ஸ்பரிசம் படர்வதை உணர்ந்ததும், திடுக்கிட்டாள் சுமதி. ராஜா விளையாடு