பக்கம்:சீதைக்கு ஒரு பொன்மான்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

133


திசைமுனைகள். இருமுனைப் போராட்டத்தில் ஈடு கொடுக்க முடியாமல் புழுங்கினுள் சுமதி. ஊம்! போட்ட லெட்டருக் குப் பதில் போடக்கூட மனம் இல்லாமற் போய்விட்டது, குமாருக்கு. இந்நிலையில், அக்காவின் சாவுக்கு தானகவே வந்து போனவன், ஆறுதலுக்காகவேனும் ஒரு கடிதம் எழுதுவானென்று எதிர்பார்ப்பது நியாயமல்ல வென் பதையும் அவள் அறியாமல் இல்லேதான்; ஆனாலும், சிறு பிள்ளைத்தனமாக இந்த மனம் சபலப்பட்டுத் தொலைக் கிறதே?-என்ன செய்யட்டும்?-அது போக ட் டு ம். இப்போது குமாருக்கு அவனுடைய திருமணம் சம்பந்தமாக ஓர் ஏற்பாட்டைச் செய்து வைத்துக் கொண்டு, கடிதம் போட்டால், அதற்காவது உண்டு, இல்லை என்று ஒரு வரிஒரே வரி எழுதமாட்டான?...முன்பெல்லாம் பூரீ மீளுட்சி சுந்தரேஸ்வர் தெப்பத் திருவிழாவிற்கு அரிமளத்துக்கு ஒரு நாள் லீவில் போனல்கூட, அவள் அங்கு போய்ச் சேரு வதற்குள் குமாரின் கடிதம் அங்கே அவள் வரவுக்காகக் காத்திருக்குமே?...காதலே இழக்க நேர்ந்தால், மனத்தையுமா இழந்து விடுவது?- நல்ல மனிதர்!’

சுமதி சுமதி:

பட்டணம் பறிபோன மாதிரி அலட்டுவது அம்மா தானே?-அம்மாதான்! இப்படி நிர்த்தாட்சண்யமாகவும் மூர்த்தண்யத்தோடும் அழைப்பதற்கு அம்மாவுக்கு மட்டுந் தான் தெரியும். அத்தான் நான் அறிந்தவரை-அக்கா வாழ்க்கை நடத்திய அந்தக் காலத்திலும் சரி,-அக்கா தெய்வமாகி இப்போது எங்கள் வாழ்க்கையை நடத்தி வருகின்ற இந்தக் காலத்திலும் சரி, ஒருநாளும் குரல் அதிரக் கூப்பிட்டதே கிடையாது. அத்தானுக்கென்று ஒரு பான்மை உண்டு; பாங்கும் உண்டு; பதமும் கூட உண்டுதான்! ஆளுல், சாது மிரண்டால் காடு கொள்ளாது என்ற உச்சவரம்பும் அவருக்குச் சொந்தம்தான்! ஒடினுள் சுமதி, ராஜா நெஞ் சிலும் நினைவிலும் ஆடிவரும் தேகை ஆடிக் கொண்டிருக்க, ஒடினள். போன வாரம் திடீரென்று வாந்தி பண்ணினன்;

9سس68