பக்கம்:சீதைக்கு ஒரு பொன்மான்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Í 32

'அதனுலேதான், அவர் எல்லா மட்டத்திலேயும் மகாத்மா ஆகிவிட்டார்!...அன்பு யாரையுமே பழி வாங்காது அப்படின்னு சத்திய சோதனையிலே;ஒரு இடத்திலே சொல்லி யிருந்ததை நேற்று நான் சொல்லிக் காட்டலேயா, சுமதி'

ஒ. அப்படீங்களா?’’

"நீயும் சத்திய சோதனையைப் படிக்கவேனும், சுமதி!' என்று வேண்டிக் கொண்டான் சுந்தர்.

அதற்குள், சுமதியின் கவனம் திசைமாறியது.

ஆட்டுக்கால் சூப் வாசனை உள்ளேயிருந்து வெளியே வந்தது.

அத்தானுக்காகத் தயாராகி விட்டது.

நெருங்கிய உறவினர்கள் சிலர் காலையிலேயே வந்து விட்டார்கள். சுமதிக்கு உறவு; அரிமளத்திலிருந்து வந்தவர்கள். சுந்தரின் சார்பில் உறையூரிலிருந்து சித்தப்பன்காரர் வந்திருந்தார்.

எல்லாம் சரி.

ஆனல், சுமதி எதிர்பார்த்திருந்தவர்கள் இன்னமும் வரக் காளுேம்!

ஒன்று : சுஜாதா-குமாரி.

இரண்டு : குமார்-மிஸ்டர்.

இவ்வாறு பத்திரிகைக் கதைகளில் வருவது மாதிரி இனம்பிரித்து, பருவம் பகுத்துத் தன்னுள்ளே சிந்தித்துச் சொல்லிப் பார்த்தபோது, வேடிக்கைச் சிரிப்பொன்று வெடிக்காமல் தப்பவில்லை. இவர்கள் இரண்டு பேரும் சேர்ந் தாற்போல வராமல் இருக்கிருர்களே இன்னும்?-சேர்ந்தாற் போல எவ்வாறு வரக்கூடும்? சுஜாதா திருச்சியிலிருந்தும், குமார் தஞ்சையிலிருந்தும் வரவேண்டும். எதிரெதிரான