பக்கம்:சீதைக்கு ஒரு பொன்மான்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

131


அழைப்பை வைத்து விட்டுத் திரும்பினுள் சுமதி. புதிய புதிய உணர்வுகள் உள்ளத்தில் ஆர்ப்பரிக்கத் தொடங்கின. புதிதாய்ப் பிறந்திருப்பவளாயிற்றே?

கோடை வெய்யில் சோடை ேப ா க | ம ல் சுட்டெரிக்கிறது!

அம்மா ஆட்டுக்கால் சூப்' தயாரிப்பதில் முனைந்திருந் தாள்.

சுமதிக்கு அத்தி பூத்த பாவனையில் வந்திருந்த கடிதம் ஒன்று அவள் கையிலேயே கிடைத்ததென்பது அபூர்வம் தானே? சென்னை மாநகரம் அனுப்பிய அவளது பதவி விலகல் கடிதத்தைத் தஞ்சையம்பதி ஏற்றுக் கொண்டு விட்டது. அழகான பெருமூச்சு அழகாகவே வெளியேறியது. அத்தானைத் தேடி வந்தது; வந்த தகவலைச் சொல்லத் தேடி ஓடினுள்.

இப்போதெல்லாம் சுமதி இல்லாத நேரங்களில்ராஜா ஒய்வு கொடுத்த வேளைகளில் சுந்தருக்குக் காந்தித் தாத்தாதான் துணை. -

ஆர்வத்தோடும் அதிசயத்தோடும் எதையோ ரசித்துச் சீரணித்துக் கொள்ள முயன்று கொண்டிருந்தான் சுந்தர்.

எட்டிப் பார்த்தாள்.

படித்துக் காட்டினன்.

"...ஒரு பெண் தன்னை அறியாமலோ அல்லது தன்னை மீறியோ களங்கப்பட நேருமேயானல், அத்தகைய அபலைப் பெண்களுக்குர பாரத சமுதாயம் அடைக்கலம் கொடுக்க வேண்டியதே முதல் கடமையாகும்!”

காந்தி மொழி அவளது கன்னி மனத்தில் ரீங்காரம் செய்து கொண்டிருந்தது. சமூகத்திலே அபலைகளாக ஆக்கப்படும் நிரபராதிப் பெண்கள் பேரிலே மகாத்மா வுக்குத்தான் எத்தனே பச்சாத்தாபம்! பார்த்தீங்களா, அத்தான்?" என்ருள் சுமதி.