பக்கம்:சீதைக்கு ஒரு பொன்மான்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130


தென்று பெயர்ப் பட்டியல் விரிந்துவிட்டது. திருமணத்தைக் கடைசிப்பட்சமாகக் குடியிருக்கும் வீட்டிலாவது நடத்தினுல் தான் தேவலாம் என்பது தெய்வநாயகியின் ஆசை. ஆளுல் மாப்பிள்ளை, "இது எனக்கு இரண்டாம் கல்யாணம்,சுமதிக்கு இது முதல் கல்யாணம் என்கிறதும் எனக்குத் தெரியும். என் அருமைச் சுசீ தெய்வமாக உத்தரவு போட்டு நடத்தி வைக் கப்போற இந்தக் கலியான விசேஷம், ரொம்பவும் எளிமை யாக நடந்தால் போதும் என்கிறதுதான் என் அபிப்பிராயம்; ஆகச்சே, திருவேற்காட்டில் கருமாரி அம்மன் கோயிலிலே கல்யாணத்தை நடத்துறதுதான் உசிதம்' என்று தீர்மான மாகச் சொல்லி விட்டபின், தெய்வநாயகி வாயைத் திறக்க முடியுமா?- பேசவும் சாப்பிடவும் மாத்திரமே அவள் வாயைத் திறந்தாள்.

சுமதியையும் சும்மா சொல்லிவிடக் கூடாது. குழந் தைக்கு நேராக ஆகிவிட்ட அத்தானுக்கு வேண்டிய பணி விடைகளைச் செய்வதில் பாதிப் பொழுது கழிந்துவிடும்; மீதிப் பொழுதுக்குப் பதில் சொல்லத்தான் இருக்கவே இருக் கிருன் ராஜா அவனுவது அப்பா மாதிரி வீம்பு பிடிக்காகமல், வம்பு பண்ணுமல் இருக்கிருளு? அதுவும் இல்லை.

மிச்சம் மீதியிருந்த அழைப்புகளில் ஒன்றை எடுத்தாள் சுமதி; மறுபடி படித்தாள் :

"......நிகழும் இராட்சச ஆண்டு பங்குனித் திங்கள் எட்டாம் நாள் (21-3-1976) ஞாயிற்றுக்கிழமை சுக்கில பட்சம், தசமி திதி, மகம் நட்சத்திரம் அமிர்த யோகம் கூடிய சுபயோக சுப தினத்தில் காலை மணி ஏழுக்கு மேல் ஒன்பதுக்குள் ரிஷப லக்னத்தில் எனக்கும் திரு நிறைச் செல்வி சுமதிக்கும் திருவேற்காடு பூரீ தேவி கருமாரி அம்மன் சந்நிதியில் நடைபெறும் திருமணத் திற்குத் தாங்கள் சுற்றமும் நட்பும் சூழ வருகைதந்து எங்களை வாழ்த்தியருள வேண்டுகின்றேன்.

தங்கள் அன்புள்ள, இராம. சுந்தர்."