பக்கம்:சீதைக்கு ஒரு பொன்மான்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

129


'சொல்லுங்க, சொல்லுங்க!”

'உன்னேயும் என்னையும் போலவே நம்ப ராஜாப் பயலும் கொடுத்து வச்சவன்தான்! அதேைலதான் அவன் நம்ப ரெண்டு பேரையுமே எடுத்துக்கிட்டான்'

"ஆமாங்க, ஆமாங்க! நம்ப ராஜா வெறும் ராஜா இல்லே; இந்த நாட்டு ராஜாவாக்கும் ராஜாவிலேயும் ராஜா இளைய ராஜா இல்லீங்களா? ராஜாக்கண்ணு அதிர்ஷ்டக் காரக் கண்ணுதான்!” இரண்டாவது தவணையாக இப் போதும் ஆயிரம் கட்டி முத்தங்களைக் கெட்டியாக எண்ணிக் கொடுத்துக் கொண்டிருந்தாள் சுமதி.

'சுமதி!......”

'சொல்லுங்களேன்!”

ராஜா, ராஜான்னு கூப்பிட்டுக் கூப்பிட்டுப் பழகிப்

போயிட்ட இந்தப் பெயரையே நம்ப ராஜாவுக்கு நிலைக்க வச்சிட்டா, என்னவாம்?

"ஓ! தாராளமாக நம்ப ராஜா எப்பவுமே நம்மளுக்கு ராஜாவே தானுங்களே?... அதுமட்டும் இல்லீங்க, சுசீ செல்ல மாக வச்சுச் செல்வமாகக் கூப்பிட்ட பேராச்சுங்களே ராஜா என்பது!...”

ராஜாவுக்கும் அந்தப் பெயர் இஷ்டம்தான் போலும்!ராஜகம்பீரத்தோடு மறுபடியும் சிரிக்கின்ருன்!...

நாற்பது நாட்கள் எப்படித்தான் அத்தனை வேகமாகப் பறந்தோடினவோ?

தெய்வநாயகிக்கு வேலை நெட்டி வாங்கியது. அன்ருடம் நடைபெற்ருக வேண்டிய வீட்டு அலுவல்களோடு கலியான வேளைகளும் சேர்ந்து கெண்டன. கல்யாணம் அப்படியொன் றும் விசேஷமாகவோ, தடபுடலாகவோ ஏற்பாடு செய்யப் படவில்லைதான்; என்ருலும், சொந்த பந்தம், உறவு முறை என்று சுருக்கிப் பார்த்தாலும்கூட, இருபது-இருபத்தைத்