பக்கம்:சீதைக்கு ஒரு பொன்மான்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128


மனிதன், ஆளுலும், கொடுத்து வச்சவன்; உன்னே எடுத்துக்கப் போறேனே!' தேம்பலாளுன் சுந்தர்.

சுந்தரின் அன்புப் பிடியினின்றும் மெல்ல மெல்லமெள்ள மெள்ள விடுதலை பெற்ருள் சுமதி. அன்பான அத் தானே இதயத்தால் பார்த்தாள். ஈரம் கசிந்திருந்த கைகளைத் தூக்கி, சுந்தரின் நனைந்திருந்த இமைகளைத் துடைத்தாள்; தோள்ப் பட்டையின் இடது புறத்தில் முந்தானையை நாணத் துடன் வளையோசை விளையாடப் போட்டுக் கொண்டாள்; சிவப்புக்கல் மூக்குத்தி கண்சிமிட்ட மறுபடி அத்தானே நோக்கிளுள். சுந்தரின் பார்வை அவளை என்னவோ செய் தது; அண்ணலும் நோக்கினன்; அவளும் நோக்கிளுள்' பாடல் அவளது பூவை மனத்தில் பூமணம் ஆயிற்று. இப் போது அவளுக்குப் புதுமையான வெட்கம் வந்து விட்டதுபுரட்சிக் கோலத்தில்! அத்தான், நானும் கொடுத்து வச்சவ தான்; அதனுலேதான், நான் உங்களை எடுத்துக்கிடப் போறேனுக்கும்!” உருக்கமாகப் பேசிளுள் சுமதி. உதய சூரியனின் அழகொளியில் கண்ணிர் முத்தங்கள் மின்னிப் பொலிகின்றன.

அவர்கள் இருவருக்கும் நடுவில் தொட்டிலில் இதுவரை 'கம் மென்று கிடந்த குழந்தை இருந்திருந்தாற்போல், சிரிக்கத் தலைப்பட்டது. கைகளை நீட்டி நீட்டி விளையாடி யது; விளையாட்டுக் காட்டியது.

"உன் மகனுக்குத் தன் அம்மாவைத் தேடி வத்திடுச்சு,’’ என்ருன் சுந்தர்.

தாயின் அரவணைப்பில் ராஜா கட்டாயம் சொர்க்கத் தைக் கண்டிருப்பான்!

'சுமதி......சுமதி:

  • என்னங்க???

"ஒரு ரகசியம், தெரியுமா?’

'சிதம்பர ரகசியமா, அத்தான்?’

'ஊஹாம்; இது ராஜா ரகசியம்!”