பக்கம்:சீதைக்கு ஒரு பொன்மான்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

127


என்று நாத்தழுதழுக்கக் கூறியவாறு, சுசீலாவின் உருவத் தைச் சுட்டிக் காட்டினன் சுந்தர்.

சுந்தர் சொல்வது மெய்தான்.

அன்புத் தங்கையின் ஆத்மார்த்தமான சத்தியப் பேச்சைப் பூரணமாக அங்கீகரித்துத்தான் சுசீலா அத்துணை பான்மையுடன் புன்னகை புரிந்து கொடிருக்க வேண்டும்!

கூப்பிய கரங்களுடன் ஒடிப் பாய்ந்த சுமதி, அக்கா' என்று ஒலம் பரப்பியவளாகச் சுசீயின் திருவுருவப் படத்தின் திருச்சந்நிதானத்தில் அப்படியே நெடுஞ்சாண்கிடையாக விழுந்தாள்: அக்கா, நம்ம ராஜாவுக்கு நீ எப்படி அம்மாவோ அதே கணக்கிலே, நானும் அம்மா என்கிற நல்ல எண்ணத்தை எந்தவிதமான பாகுபாடும் இல்லாது, எப்போதுமே உணரக் கூடிய ஒரு ஞானத்தை எப்போதுமே கொடுத்திடு!... என்று நெஞ்சம் நெக்குருகப் பிரார்த் தித்தாள் சுமதி.

சுந்தரின் மெய்சிலிர்த்தது; கண்கள் குளமாயின; உள்ளம் புயல் அடங்கிய ஆழியென ஆர்ப்பரித்தது; இரண்டு தோள் களிலும் இரண்டு கைகளைக் கொடுத்து சுமதியை மென்மைப் பண்பு பொழிந்திட தூக்கி எடுத்து, நெஞ்சோடு நெஞ்சாக இறுக்கமாக அனைத்து ஆரத்தழுவிக் கொண்டான். சுமதி, உன்னுேட பிரார்த்தனை நியாமானது; நேர்மையானது; நிச்சயம் பலிச்சிடும் ராஜாவுக்குச் சுசி மாதிரி நீயும் அம்மா தான் ராஜா உன்னையே தன் அம்மான்னு இப்ப நினைச்சிருக் கிற மாதிரியே எப்பவும் நினைச்சிக்கிட்டு இருப்பான் உண்மை யும் அதுவே தானே?...இன்னொரு உண்மையையும் மனசைத் திறந்து இப்ப சொல்லிப்பிடறேன்; என் வரையிலும் சுசியும் நீயும் ஒண்னுதான்! இந்தச் சத்திய நெறியை நானும் ஒருபோதும் மறக்க மாட்டேன்...நம்ப தமிழ்ச் சமுதா யத்துப் பெண்களுக்கு மத்தியிலே நீ ஒரு அபூர்வப் பிறவி! என்னைக் காட்டிலும் ஊதுவத்திக்குத்தான் உன் அருமையும். பெருமையும் துலாம்பரமாகத் தெரியும். நான் வெறும்