பக்கம்:சீதைக்கு ஒரு பொன்மான்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126


சுமதி தவித்துப்போனள். "என்னுங்க, அத்தான்?... அப்படினன்னு சொல்லி, அத்தோடு நிறுத்திட்டீங்களே?” என்று துருவிக்கேட்டாள் சுமதிக்கன்னி.

"தன்னேட அம்மா செத்துப் போயிட்டதனலே, அந்த இடத்துக்கு நீ வரப்போகிற துப்பு நம்ப ராஜாவுக்குத் தெரிஞ்சிருக்க நியாயமில்லைதானே, சுமதி?’ பிசிறு தட்டிய தொனியில் சோகம் ஆதார சுருதியாக ஒலித்தது.

வீணே மீட்டிற்ைபோன்று, டங்' கென்று அவளுக்குப் பதில் சொல்ல முடியவில்லை; தெரியவும் இல்லைதான். ஆன. லும், தன்னுள் பொங்குவிரி காவிரியாக, நுங்கும் நுரையும் சுழிக்க ஒடிக் கொண்டேயிருந்த அசல் தாயன்பும் தாய்ப் பாசமும் அவளுக்கு விடை சொல்லிக் கொடுக்காமல் இருக்குமா? அத்தான், என் அக்கா செத்துப் போனதால், அந்த இடத்துக்கு நான் உரிமையோடவும் உறவோடவும் வந்து சேர்ந்திருக்கிற விவரம் நம்ம ராஜாக்கண்ணுக்குத் தெரிஞ்சிருக்குமோ, என்னவோ?-அந்த உண்மை எனக்குத் தெரியாது. ஆனால், என்னைத் தன்ைேட அம்மா என்றுதான் நம்ப ராஜா நம்பி அங்கீகரிச்சிருக்கான்; அந்தத்தர்மத்தையும் நியாயத்தையும் சத்தியத்தையும் என்னலே திரிகரண சுத்தியாக உணர முடியுதுங்க, அத்தான்! தன்னைப் பெற்ற அம்மாவை என்ைேட உருவிலே அந்தக் குழந்தை கண்டு ஆறுதல் அடையாமல் இருந்திருந்தால், இந்நேரம் குழந்தை ஏங்கி ஏங்கி உருக்குலைஞ்சு போயிருக்காதுங்களா? பிறந்த அன்றிலிருந்து இன்று பரியந்தம் ராஜாவை என்னுேட குழந்தையாகவே மதிச்சு வருகிறது எத்தனை உண்மையோ, அத்தனை உண்மைதான், குழந்தை என்னைத் தன் சொந்தத் தாயாகவே மதிச்சிருக்கும் என்பதும்...இல்லீங்களா, அத்தான்? பேச்சை நிறுத்தினுள் சுமதி.

'வாஸ்தவந்தான், சுமதி, வாஸ்தவந்தான்!” ஆமோதித் தான் சுந்தர். விம்மல் தொடர்ந்தது: "அதோ பார், சுமதிப் பெண்ணே-உன் அன்புத் தெய்வம் சுசீ உன்னேட பேச்சை அங்கீகாரம் செஞ்ச புன்னகை செஞ்சுக்கிட்டு இருக்காளே!"