பக்கம்:சீதைக்கு ஒரு பொன்மான்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதினைந்து

சுஜாதாவும் குமாரும்

இேேளக்குத் திருமணம்! ...

குழந்தைக்குக் கொண்டாட்டம், பிஞ்சுக் கைகளையும் குஞ்சுக் கால்களையும் அலைவீசிற்ைபோன்று வீசியபடி கும்மாளம் போட்டது.

எதிரும் புதிருமாக ஆளுக்கொரு கூடைநாற்காலியில் அமர்ந்து குழந்தையை ரசித்துக் கொண்டிருந்த சுந்தருக்கும் சுமதிக்கும் உண்டான களிப்பு இவ்வளவு அவ்வளவு அல்ல:இருக்காதா, பின்ன?

‘ராஜாவுக்கென்ன, இன்னிக்கு இத்தனை குதுகலம் பீச்சியடிக்குது?’ என்று சுமதியைக் கடைக்கண்ணுல் அளந்த வண்ணம், வினவினன் சுந்தர்.

'நமக்குக் கலியாணம் ஆகப்போகுது இல்லீங்களா? நம்மோட சந்தோஷம் நம்ப பிள்ளைக்கும் இருக்காதுங்களா, அத்தான்?’ என்று தத்துவார்த்தமாகப் பதில் அளித்தாள்

சுமதி.

அப்படின்ன...? தொடர எண்ணிய பேச்சுக்குத் தொடர்சேர்க்க முடியாமல் திண்டாடினன் சுந்தர்.