பக்கம்:சீதைக்கு ஒரு பொன்மான்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

141


என் சிநேகிதரும் கூட!' என்று சுஜாதாவுக்கு குமாரை அறிமுகம் செய்து வைத்தாள் அவள்.

சுந்தர் மாப்பிள்ளை முறுக்கோடு வந்தான்; முகrவரம் செய்திருந்த முகத்தில் தூதனப் பொலிவு மின்னியது. 'வாங்க', என்று இருவரையும் வரவேற்ருன். சுஜதாவை அவனுக்கு இப்போது தெரிந்துவிட்டது. நல்ல பெண்மணி தான்! முகத்தைப் பார்த்தால் தெரியாதா?

சுஜாதா ஒரக்கண்ணுல் குமாரை அளந்தாள்; பெண்மையின் நாணம் நயனங்களிலும் உதடுகளிலும் பாகம் பிரிந்தது. நல்லவராகவே இருக்கவேணும் குணநலத்தின் கணிப்பில் ஆறுதல் கனிந்திருக்கத்தான்வேண்டும். எதையோ பறிகொடுத்த ஏக்கம் குமாரின் முகத்தில் நிழலாடுவது போலத் தெரிவில்லையா?-இப்போது, அமைதியில் குழப்பம் எட்டிப் பார்த்தது. ஒருவேளை, சுமதியைக் காதலித்துத் தோற்றதால் ஏற்பட்ட தற்காலிகமான மனச்சடனையாக இருக்கலாமோ? சுமதி செய்யும் முயற்சியின் முடிவு தெரியட்டும்!-குமார் சொல்லும் முடிவும் தெரியட்டும்!சுஜாதா சுயநினைவை ஆட்கொண்ட நேரத்தில், குமார் தன்னைக் கள்ளவிழிப் பார்வையால் ஒருமுறை பார்க்க மாட்டாரா என்று நம்பியிருந்தாள். ஆனால், அவன்குமார் எங்கோ சூன்யத்தையல்லவா வெறித்துப் பார்க்கிருன்! திரும்பிளுள். சுமதியைக் காணுேம்!

மஞ்சள் வெய்யிலில், மோகினிச் சிற்பமாக, அணிமணி துலங்க வந்தாள் சுமதி. கையில் காப்பி இருந்தது; காப்பியில் ஆவி பிரிந்தது. ஆளுக்கு ஒன்ருக நீட்டினுள்.

குமார் மாத்திரம் காப்பித் தம்ளரைத் தவறவிட்டான். என்னவோ ஒரு சிந்தனையில், ஏதோ ஒரு மன நிலையில் காப்பியை வாங்கியவனின் கைவிரல் சுமதியின் சுட்டுவிரலைத் தொட்டு தீண்டிவிடவே, அந்தத் தொட்டுணர்வில் விளைந்த அதிர்ச்சியால் வந்த வினை. வினை யாரை விட்டது? அவன் ஆடு திருடிய கள்ளனக விழித்தான்; பேந்தப் பேந்த