பக்கம்:சீதைக்கு ஒரு பொன்மான்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142


விழித்தான்; விழி பிதுங்கவும் விழித்தான்; தலையை அவமானத்தால் தாழ்த்திக் கொண்டவன் மறுபடியும் தலையை உயர்த்த இரண்டொரு விடிைகளே தேவைப் பட்டன; அவமான உணர்வுகளைத் தற்போது அவன் கழுவிக் கொண்டிருக்கலாம், அல்லது. அவ்வுணர்வுகளை அசட்டை செய்திருக்கலாம். அவன் பார்வையில் சுமதியோ, இல்லை, சுந்தரோ தென்படவில்லை. அதற்குள்ளாக, மீண்டும் சிந்தனையின் வசப்படலானன். களைதப்பிக் கிடந்த முகத் திலே சலனமும் அமைதியும் சதுரங்கம் ஆடின. கண்கள் கசிகின்றன. அருகிலிருந்த டேஞ்சர் சிக்னல் கைப் பெட்டியில் இருதுளிக் கண்ணிர் சிந்திச் சிதறுகிறது!

மற்றவர்கள் காப்பியைக் குடித்துவிட்டுத் தம்ளர்களே எச்சரிக்கையுடன் தரையில் வைத்தனர்.

குமாருக்கு வெறும் காப்பியில் கூட ஏமாற்றம். அந்த ஏமாற்றம் அவனுடைய சோர்ந்த வதனத்தில் அழகாக எழுதி ஒட்டப்பட்டிருந்தது. எவ்வளவு கம்பீர அழகுடனும் மிடுக்கான ஆண்மையுடனும் துடுக்கான பாவனையுடனும் தஞ்சாவூரில் காணப்பட்டான் குமார்!-சமுதாயத் துரோகி, “மகாத்மா வேஷம் போட்டு மேடையில் ஏறிக் கூத்து ஆடி முடித்து வேஷத்தைக் கலைத்துக் கொண்ட மாதிரி ஏனே. அவன் இப்போது தோன்றினுன்!--ஏன் அப்படித் தோன் றிஞன்?-நெஞ்சைப் பிசைத்து கொண்டான். பாவம், மனச் சாட்சி என்னவாயிற்ரும்?

'குமார், இந்தாங்க காப்பி, ஜாக்கிரதையாய் வாங்கிக் கணும் இந்தத் தடவை,' என்று அபாய அறிவிப்புக் கொடியைக் காட்டி, காப்பிக் குவளையை நீட்டினுள் சுமதி. அவள் அவனே ஆதரவோடு, அனுதாபத்தோடு நோக்கினள். தெரியாமல் செய்த தவற்றை-ஊகூம், தெரியாமல் ஏற்பட்டு விட்ட தடுமாற்றத்தை அவள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்பது அவளது நெகிழ்ந்த பார்வையில் பளிச்சிட்டது. அத்தான் எப்படி எடுத்துக் கொண்டிருப் பாரோ?-சுந்தரின் பக்கம் திருஷ்டியைத் திசை மடக்கினுள்.