பக்கம்:சீதைக்கு ஒரு பொன்மான்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

143


அவன் இயல்பான மன நிலையுடன் இருந்ததை அறிந்தாள், புயலுக்குச் சந்தர்ப்பம் கிடைக்காமற் போனவரை நல்லது. உப்புச் சப்பில்லாத ஒரு சின்னஞ்சிறிய தடுமாற்றத்தையா அத்தானின் நல்லமனம்-பொன்மனம் மன்னிக்காமல் இருந்துவிடப் போகிறது?

குமார் எச்சரிக்கையோடு காப்பியை வாங்கி, எச்சரிக் கையோடு குடித்துவிட்டு, அதே எச்சரிக்கையுடன் காலிக் குவளையைத் தரையில் வைத்தான்.

சுமதிக்குச் சிரிப்புச் சிரிப்பாக வந்தது. காலிக் குவளையை எடுத்தபோது, அடுத்த வீட்டுக் கறுப்புப் பூனே சிதறியிருந்த காப்பித் துளிகளே நக்கியதை வேடிக்கை பார்த்தாள்; வாலை ஆட்டிக் கொண்டே ஓடிவிட்டது. ஒரு சொட்டுக் காப்பிக் குக்கூட நன்றியா?-வாசற்புறம் யாரோ கூப்பிட்ட குரல் கேட்கவே விரைந்தாள். தொழு நோய்ப் பிச்சைக்கார ஜோடி ஒன்று தம்பதி சமேதராக வாசலில் எழுந்தருளியிருந்த 'பசிக்கோலம் அவளுடைய இரக்கச் சிந்தையைத் தொட் டிருக்க வேண்டும். சாதப் பானையில் மிஞ்சியிருந்த பழைய சோறு பூராவையும் அள்ளிப் போய்ப் போட்டாள். அவளுக்கு நெஞ்சு நிறைந்தது. அவர்களுக்கும்தான்!-- நெஞ்சு நிறைய வாழ்த்திச் சென்ருர்கள்!-நேருஜி துயரத் தோடு குறிப்பிட்டாற் போன்று, இந்தப் பசிப் பிரச்னை மரபு வழிச் சொந்தம் கொண்டாடி விடுமோ?

நாட்கள் ஒடிக் கொண்டிருக்கின்றன அல்லவா?-ராஜா மார்பைத் தரையில் பதித்துக் குப்புறப் படுக்கப் பாடுபட்டுக் கொண்டிருக்கிருன். எதிரே ரயில் வண்டித் தொடர் தண்ட வாளம் இல்லாமலே ஜெட் வேகத்தில் சிட்டாகப் பறந் தோடிக் கொண்டிருந்தது. பிள்ளையாண்டானுக்கும் ரசிகத் தன்மை இல்லாமல் இருக்கலாமா?-மிக நளினமாகப் புன்னகை செய்தான், இப்போது.

சுஜாதாவை விளித்த நேரத்தில், உள்ளே தக்காளிச் சாம்பாரின் நெடியை அனுபவித்தாள் சுமதி. என்ன சுமதி?”