பக்கம்:சீதைக்கு ஒரு பொன்மான்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

145


லெட்டர் கிடைச்சது; அதுசரி, நீங்க உங்க ஆக்காளோட காரியமாய் லீவிலே தஞ்சாவூரிலேயிருந்து புதுகோட்டைக்கும் அப்புறம் அரிமளத்துக்கும் போயிருந்தபோது, உங்களுக்கு நானாக வலிய ஒரு கடிதம் போட்டேன், அதுக்கு நீங்க ஏன் பதிலே போடவில்லையாம்?' என்று அவளை வசமாக மடக்கினன்.

'அப்படீங்களா?’ அதிர்ந்தாள் சுமதி. உங்க கடிதம் எதுவும் நாளது தேதிவரை என்கைக்குக் கிடைக்கவே இல்லீங்களே?... அம்மாவைக் கூடக் கேட்டேன்; ஒண்ணுமே வரல்லேன்னு சொல்லிட்டாங்களே?’ என்று கவலை சூழத் தெரிவித்தபின் எழுந்து அம்மாவைத் தேடிப் போய்க் கேட்டாள்.

அம்மா-தெய்வநாயகி அம்மாள் குற்ற உணர்வை மறைக்க எத்தனம் செய்தவளாக, அந்த மனிதர் குமார் சொல்றது இந்த விசயத்திலே சுத்தம்தான், சுமதி. அந்த ஆளுக்கும் உனக்கும் உண்டான சொந்தம் முறிஞ்சு போக நேர்ந்திட்ட கட்டத்திலே, நீ அவரோட காதல் கடிதத்தைப் பார்ப்பது நல்லதில்லேன்னு எனக்குத் தோணியதாலே, அதை நான்தான் வீட்டுக் கொல்லைப் புறத்திலே ரகசியமாக ஒளிச்சு வச்சுப்பிட்டேன்; இரு. எடுத்தாரேன்,' என்று தளர்ந்த குரலில் விளக்கம் கொடுத்துவிட்டு, அந்தக் கடிதத் தையும் தேடிப் பிடித்து எடுத்து வந்து கொடுத்து விட்டாள் முதியவள். 'சுமதி, நீ இந்தக் கடுதாசியைப் படிச்சுட்டு, இங்கேயே அடுப்பிலே போட்டுப் பொசுக்கிடு. இந்தக்குமார் இங்கே திரும்பவும் வராமலே இருந்திட்டால் தேடலாம்னு கூட நான் நினைச்சேன், சாமியையும் வேண்டிக் கிட்டேன்!” என்பதாக அவள் தன் மனத்தில் உள்ளதை வெளியே கொட்டிவிடவும் தவறவில்லை.

அம்மா தன்னிடம் குமாரைக் குறித்து ஏன் இவ்வாறு "உஷார் செய்ய வேண்டும்?-சுமதிக்கு ஒன்றுமே விளங்கவில்லை. மீண்டும் குமாரைத் தேடி நடந்தாள். குமாரின் கடிதம் இப்போது அவள் கைவசம் கிடையாது. "மிஸ்டர்