பக்கம்:சீதைக்கு ஒரு பொன்மான்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146


குமார், உங்க கடிதத்தை அம்மா ஞாபகமறதியிஞலே என்னிடம் கொடுக்க மறந்து போயிருக்காக; அதுசரி. நம்ப விஷயத்துக்கு - அதாவது, உங்க விஷயத்துக்கு இனி வருவோம். கலியாணவேலை ஏகமாய்க் கிடக்கு துங்களே?... சரி, சொல்லுங்க : உங்க முடிவு என்ன? அதாகப்பட்டது, உங்களை என் ஆருயிர்த்தோழி கையிலே ஒப்படைச்சு உங்க வாழ்க்கையிலே ஒரு மறுமலர்ச்சியை உண்டாக்க வேணும்னு நான் போட்டிருக்கிற என் திட்டத்தைப்பற்றின உங்கள் முடிவு என்ன?...ஊம், வாய்திறந்து பேசுங்க, குமார்; மனம் திறந்தும் பேசுங்க, குமார்! நீங்க மனநிம்மதியோடே, புதிய வாழ்க்கையை நேரான வழிமுறையிலே மேற்கொண்டால் தான், எனக்கும் மனநிம்மதி கிடைக்கும்! ம்...சொல்லுங்க குமார், உங்க முடிவை!...”

சுமதி உணர்ச்சிவசப்பட்டாள்.

குமார் அவளைப் பாதாதி கேசமாக ஊடுருவிப் பார்த்தான்; பார்த்துக் கொண்டிருந்தான்; புது வெள்ள மெனக் கண்ணிர் சுழித்தது : 'சுமதி, தயவு பண்ணி என்னை மன்னிச்சிடுங்க; நான் உங்க ஆருயிர்ச் சிநேகிதி சுஜாதாவை ஏற்கிற நிலையிலே இல்லை...இதுக்குமேலே நீங்க என்னைச் சோதிச்சிடாதீங்க, சுமதி!'

குமாரின் முடிவு சுமதியை நெஞ்சுலரச் செய்தது. பூகம்பமாக உள்ளமும் உடலும் அல்லாடின; தள்ளாடின. குமார்! நீங்க உங்க காதலே இழக்க நேர்ந்ததால், நீங்க உங்க வாழ்க்கையையும் இழந்திட வேணுமா?’ என்று விம்மிளுள் கன்னிப்பூ. என்னென்னவோ நினைவுகள் எப்படி யெல்லாமோ பிரளயமாகக் கொந்தளித்தன.

குமார் விரக்தியோடு சிரித்தான். மெய்யாகவே அவன்தான் சிரித்தான? அவனேதான் சிரித்தாளு? சுமதி, இப்போது இருக்கிற என்னுடைய மன நிலைமையிலே, நீங்க நடத்தக்கூடிய தத்துவ விசாரணைகளுக்கெல்லாம் எனக்கு விடை சொல்லத் தெரியாது. ஆனால், ஒன்று மாத்திரம்