பக்கம்:சீதைக்கு ஒரு பொன்மான்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

147


தெரியும்.சுமதி, என் இதயத்திலே காதலுக்கு ஒரு_ள்" தமான-புனிதமான - ஆத்மார்த்தமான - பவித்திரமான இடம் என்றென்றுமே உண்டு!-இந்த ஒரு உண்மைச் சத்தியத்தை மட்டிலும் நீங்கள் பெருமனம் வைத்து தம்பினுல் போதும், சுமதி: எழுதிவைத்துப்பாடம் ஒப்பு விப்பதுமாதிரி பேசினன் குமார். இம்போது அவன் முகம் எத்துணை காந்தியுடன்-சாந்தியுடன் விளங்குகிறது!... கண்கள் பளிச்சென்று துலாம்பாரமாகத் திகழ்கின்றனவே!

புல்லரிப்பு இன்னமும்கூட அடங்கவில்லை, சுமதிக்கு. என்ளுேட இந்த திட்டம் தெய்வாதீனமாக நல்லபடியாக நிறைவேறிடும்னு கோட்டை கட்டினேன்; தவிடுபொடி ஆக்கிட்டாரே, மிஸ்டர் குமார்!...ஐயோ, குமார்!...” வீசின. கையும், வெறும் கையுமாகத் தோழியிடம் திரும்பிளுள். 'சுஜா, என்னை மன்னிச்சிடம்மா, என்னுடைய அன்பானபரிசுத்தமான கோரிக்கையை மிஸ்டர் குமார் நிராகரிச் சிட்டார்! விதி ஒரு திருப்பத்தோடே திருப்திப்பட்டு, தன்னுடைய விளையாட்டை நிறுத்திடும்னு நான் தப்புக் கணக்குப் போட்டுப்பிட்டேன். ஆன, விதியைத் திருப்திப் படுத்த கேவலம் மனிதப் பிண்டங்களாலே சாத்தியப் படுமா?-விதியின் விளையாட்டு தொடர்ந்துகினு இருக்கிற ரகசியம் எனக்கு இப்பத்தான் புரிஞ்சுது! ... சுஜாதா, உன்னேட எதிர்காலம் பற்றி ஒரு நல்ல முடிவுக்கு கூடிய சீக்கிரமே வந்திடுவோம்; என்னுடைய இந்தத் திட்டம் தோற்றுப் போயிருக்கலாம். ஆனலும், என் நல்ல முயற் சியை உணர்ந்து, எனக்கு உதவி செய்யத் துணிஞ்ச உன்னுடைய நல்லமனத்தை நான் எப்பவுமே மறக்க மாட்டேன்!” கண்களைத் துடைத்துக்கொள்ள மறந்தாள்

சுமதி.

பாரதத்தின் ஒற்று மை ச் சக்தியைக் குலத்திட வேண்டி, அந்நியச் சக்திகள் ஆரவாரத்துடன் முயல்வதைக் கண்டித்துக் கண்டனம் தெரிவித்திருந்த பிரதமர் இந்திரா காந்தி பற்றிய பழைய செய்தியில் புதிதாகத் திளைத்திருந்த