பக்கம்:சீதைக்கு ஒரு பொன்மான்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148


சுந்தர், தன்னை அழைத்துச் சுமதி தெரிவித்த செய்தியைக் கேட்டதும் திடுக்கிட்டு மலைத்து விட்டான்! அப்படீன்னு, இனி குமாரோட எதிர்காலம் என்னுவதாம்? அவருடைய திட்டம்தான் என்னவாம்?’ என்று கவலையோடு கேட்டான் அவன்.

அவள் வதனம் வெளுத்தது. எதுவுமே தெரியவீங்களே, அத்தான்?' என்று வேதனை தாளாமல் தெரிவித்தாள் சுமதி.

'அட, கடவுளே 'அந்தக் கடவுளுக்குக்கூட குமாரோட திட்டத்தைப் பற்றித் தெரியாதுங்க!” பின்னே?...”* "ஆமாங்க, அத்தான் குமாரைப்பற்றின இரகசியம் குமார் ஒருத்தருக்குத்தான் வெளிச்சம் மிஸ்டர் குமார் புதிர் மனிதராகிவிட்டார், அத்தான்!” என்று ஆற்ருமை யோடு குமாரைப்பற்றித் தீர்ப்புக் கொடுத்துவிட்டு, கொல்லைப்புறத்துக்கு விரைந்தாள்; அங்கிருந்து மீண்ட ப்ோது, சுட்டிப்பயல் ராஜா சுதாரித்துக்கொண்டு சிரித்த வண்ணம் தன்னிடம் தாவுவதைக்கண்டதும், அமமாவிட மிருந்து குழந்தையை வாங்கித் தோளில் அனைத்தவளாக, நடுக்கூடத்திற்கு நடை தொடர்ந்தாள். தெய்வமாக மாலை மரியாதை ஏற்றுத் திகழ்ந்த தன் அன்னையை இனம் கண்டு கொண்டாற்போன்று குழந்தை ராஜா அழகாகவும், அன்பாகவும், புன்னகை புரிந்து கைகொட்டிய அந்தக்கண் கொள்ளாக் காட்சியைத் தரிசிச்சதும், சுமதிக்கு மேனிக் சிலிர்ப்பு மிகுந்தது. அக்கா என்னை இனம் கண்டுக்கிட்ட நம்ம ராஜா உன்னையும் இனம் கண்டுக்கிட்டான்!...அக்கா! உன்னை இனம் கண்ட நம்ம ராஜா என்னையும் இனம் கண்டுக் கிட்டான்!...' - தனக்குத்தானே அமைதியாகவும் ஆனந்த மாகவும் சிரித்துக்கொண்டாள்!

விடிந்தால், சுமதிக்கும் சுந்தருக்கும் திருமணம் அல்லவா?...

| ??