பக்கம்:சீதைக்கு ஒரு பொன்மான்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதினேழு

கெட்டிைேளங்

விடிந்தால் முகூர்த்தம்!-பொழுது விடியாமல் என்ன? இந்தக் கலியுகத்தில், பொழுது விடியக் கூடாதென்று சாபமிட அனசூயையா மீண்டும் அவதரிக்கப் போகிருள்?ஆகவே, பொழுது கட்டாயம் விடியும்; விடிந்ததும், முகூர்த்தம்!

வாடகைக் கார்கள் தெருவில் அ ன வ கு த் து திற்கின்றன.

குடியரசு தினவிழாவின் அணி வகுப்பு மரியாதையை ஜனதிபதி சமீபத்தில் ஏற்றுக் கொண்ட மாதிரி, கார்களின் அணிவகுப்பு மரியாதையை விடிவெள்ளி அதோ, ஏற்றுக் கொண்டிருக்கிறது!

இப்பொழுது மணி நாலு.

கலியான வீடு திமிலோகப்பட்டது. திருமணத்தை நடத்தி வைத்து ஆசீர்வாதம் செய்யக் கூடிவிட்டவர்களின் எண்ணிக்கை இருபதுக்குத் தேறிவிட்டது. சுற்றமும் நட்பும் சூழ்ந்த பட்டியல் இவ்வளவுதான்!

சுந்தரும் சுமதியும் இரவு பூராவும் கண்ணுேடு கண் பொருதவில்லை. எளிமையான கல்யாணம்தான் என்ருலும்,

சீ-10