பக்கம்:சீதைக்கு ஒரு பொன்மான்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150


விரலுக்குத் தக்க வீக்கமாக வேலைகள் இருந்தன. இடை யிடையே, ராஜாப் பயலின் லூட்டி வேறு. எப்படியோ, சமாளித்துவிட்டார்கள். இனி, புறப்பட வேண்டியது தான்!

சுமதி மணப்பெண் கோலம் தாங்கி பெட்டியும் கையுமாக அத்தானிடம் வந்தாள். அத்தான், இந்தாங்க கைப் பெட்டி. முகூர்த்தப் பட்டு, வேட்டி எல்லாம் இருக்குதுங்க; பெட்டி பத்திரம்' என்று நினைவூட்டியவளாகப் பெட்டியை ஒப்படைத்தாள். அவள் முகம் களைப்பின் மிகுதியால் சோம்பியிருந்தது. மன உளைச்சலும் காரணம்தான். "மிஸ்டர் குமார் என் திட்டப்படி சுஜாதாவை மனம் புரிந்து கொள்ளச் சம்மதித்திருந்தால், நான் மட்டுமென்ன, என் அன்பு அத்தானும் ஆறுதலடைந்திருப்பாரே?

சுமதியை ஒருநிலைப் படுத்தப்பட்ட உள்ளத்தோடு, கர்த்த மதிபதித்துப் பார்த்த நேரத்தில், சுந்தருக்கு ஏற்பட்ட ஆனந்தத்துக்கும் அமைதிக்கும் அளவே இல்லை; இத்தகைய புதிய அனுபவம் சுசீலாவை மணவறையில் சந்தித்த சமயம் உண்டானதையும் இப்போது அவன் எண்ணினன்; எண்ணிய எண்ணம் கமழ்ந்தது; நினைத்த நினவு நெக்குருகியது. சுசீலா நல்ல அழகி, ஆல்ை, சுமதி...? மனத்தராசில் இருவரையும் அழகு என்னும் படிக்கல் இட்டு எடை கட்டிப் பார்த்தபோது, சுமதியின் தட்டு உயர்ந்தது. உண்மைதான்!-சுமதி அழகின் லட்சணங் களிலே உயர்ந்தவள்தான்! இம் முடிவுடன் அவன் மீண்டும் சுமதியை நோக்கினன். புராணக்கால மோகினி இந்த இருபதாம் நூற்ருண்டிலே சுமதியாகப் பிறந்திருக்கிருளோ என்று கூட அவன் அதிசயமடைந்தான். 'ஆஹா சுமதி இத்தனை அழகி என்கிற ரகசியமும் உண்மையும் இப்போது தானே எனக்குப் புரிந்தது! நான்தான் அதிர்ஷ்டசாலி. எனக்குக் கூட இப்படியொரு பாக்கியமா? பொழுது விடிந்தால், சுமதி எனக்கு உயிர்த்துணை ஆகிவிடுவாள்; இனி அவள் எனது இனியபாதி!...... சுசீலாவைப்