பக்கம்:சீதைக்கு ஒரு பொன்மான்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15 É

பரிசுத்தமான நெஞ்சின் பகுதியில் இருக்க வைத்து, எண்னமிட்ட வேளையிலே, அவனுடைய இதயமும் மேனியும் ஒரு விளுடி அதிர்ந்து குலுங்கவே செய்தன. "சுசீ, எல்லாப் பாக்கியமும் நீ இட்ட பிச்சையினலேதான் எனக்குக் கிட்டக் காத்திருக்குது... நான் இந்த நடப்பை மறந்திடமாட்டேன்!-சுமதி இப்போது அவன் மைத்துனி; இதே சுமதி இன்னும் சிறுபொழுது கழிந்து விட்டால், அவன் இல்லாள் ஆகிவிடுவாள். அம்மன் சந்நிதானத்திலே சுமதிக்குத் திருப்பூட்டும் நிகழ்ச்சி அவன் கற்பனையில் ஏடு பிரிந்தபோது, மெய்யாகவே அவன் மெய்ம்மறந்துவிட்டான்! -வாழ்க்கை என்பதுகூட ஒர் உத்தியோகம்தானே?-அதன் பேரில்தான், இப்படிப்பட்ட உத்தியோக மாற்றல்'கள் சம்பவிக்கின்றன போலும்!

கோழி ராகம், தானம், பல்லவி போட்டுத் திருப்பள்ளி எழுச்சி பாடுகிறது: “கொக்கரக்கோ'...

'அத்தான், டைம் ஆச்சுங்களே! புறபடலாமே?” என்று சுமதி பதற்றத்துடன் தூண்டினுள்.

சுமதியின் அவசரத்தை அழகுணர்ச்சியுடன் அனுபவித் தான் சுந்தர். மலர விருக்கின்ற புதுத் தாம்பத்திய உறவின் பிணைப்பு மகிமை வாய்ந்ததே அல்லவா? 'புறப்படுவோம், சுமதி,' என்று தெரிவித்தான். அவன் பார்வை குமாரைத் தேடியது. தேடிய வேளையில், பழைய சிந்தனையொன்று முரண்பட்ட வக்கரிப்புடன் மின்வெட்டியது. குமாருக் கென்று ரிசர்வ் செய்யப்பட்டிருந்த பாக்கியத்தை நான் அடையப் போகிறேன்! தோன்றிய உணர்வுச் சுழிப்பிலே தோன்றிய குற்றவுணர்வின்பாற்பட்ட அனுதாபம் அவனே என்னவோ செய்தது. பாவம், குமார்!!--மனித மனத்தின் பலம் அதன் வெற்றியிலும், மனித மனத்தின் பலவீனம் அதன் தோல்வியிலும் நீதியென விளைவதுதான்-விளைய வேண்டுமென்பதுதான் வாழ்க்கையின் நியதியா?-சிருஷ்டி யின் விதியா?-விதியின் சட்டமா?-ஆண்டவனின் தீர்ப்பா?

குமாரைக் காளுேம்!...