பக்கம்:சீதைக்கு ஒரு பொன்மான்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152


சுந்தர் அலட்டிஞன்.

சுமதி பதட்டமடைந்தாள், சுஜா, குமார் எங்கே?' என்று கவலை மூளக் கேட்டாள்.

"தாழ்வாரத்திலே தன்னந்தனியாக எ ைத С на т இழந்தாப்பிலே சிலையாக நின்னுக்கிட்டிருக்கார், சுமதி,' என்று குறிப்பிட்டாள் சுஜாதா.

'பாவம், குமார்!’-சுமதி பாய்ந்தாள், குமார், கோயிலுக்குப் புறப்படுகிருேம்; வாங்க,’ என்ருள்.

'நான்தான் ரொம்ப நேரமாகத் தயாராகக் காத்திருக் கேனே, சுமதி?’’

ஒ, அப்படிங்களா? சந்தோஷம். சரி, புறப்படுங்க. காப்பி சாப்பிட்டீங்களா?”

'நீ...நீங்கதானே கொடுத்தீங்க?’’

மேறந்து போச்சு.”

பேரவாயில்லை, சுமதி.”

'ஒரு சின்ன விண்ணப்பம், குமார்!’

பேஷாகச் சொல்லுங்களேன்!”

'குமார், முன்பெல்லாம் நீங்க என்னை ஏக வசனத்திலே "நீ-நீ என்றுதான் நொடிக்கு நூறு வாட்டி அழைப்பீங்க; அந்த மாதிரியே இனியும் நீங்க அழைச்சால், எனக்கு நிம்மதியாக இருக்கலாம்; ஏன், தெரியுங்களா?-நீங்க எங்க குடும்ப நண்பர்; என் நண்பர்; நான் உங்க குடும்பச் சிநேகிதி; உங்க சிநேகிதி...உண்மையான அன்பிலே பிறக்கிற நட்புக்குப் போலித்தனமான மரியாதை தேவை யில்லீங்களே?...அந்தரங்க சுத்தியான பண்பு இருந்தாலே போதுமுங்களே!’’

ஆவேசமாகவே பேசிவிட்டாள் சுமதி. பெட்டியும் கையுமாகத் தன் முதுகுப்புறம் தெளிவான நிலையுடன்