பக்கம்:சீதைக்கு ஒரு பொன்மான்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

153


நின்று கொண்டிருந்த அத்தானைக் கண்டதும் ஒரு முறை ஆழமாகப் பார்த்தாள்; பிறகு, அவன் கையிலிருந்த பெட்டியை வாங்கித் திறந்தாள். முகூர்த்தப் பட்டையும் ஜரிகை வேட்டியையும் எடுத்தாள். குமார், எங்க கல்யாணத்துக்காக அத்தான் எனக்கு எடுத்திருக்கிற முகூர்த்தப்பட்டு இதுதான்; நல்லாயிருக்குங்களா?' என்று குமாரிடம் கருத்துக் கோரினுள்.

'நன்ருகவே இருக்குது, சுமதி; உனக்கு ரொம்பவும் பொருத்தமாகவே இருக்கும்!' குமாரின் உதடுகளில் மூரல் ஊறியது. சுத்தமான புன்னகைதான்!

“ஆல்ரைட்! என்ளுேட வேட்டி எப்படி?” 'அதுவும் சிறப்பாக அமைஞ்சிட்டுதுங்க, சுந்தர்!’

பேஷ், பேஷ்' என்று கைகொட்டிச் சிரித்தாள் சுமதி-பாலகி மாதிரி.

“எனக்குள்ள முகூர்த்த உடைகளின் செலவு என் சுமதி யுடையதாக்கும்!” என்று குறுக்கிட்டான் சுந்தர்,

"சொந்த பந்தக் காரியங்களிலே வரவு செலவுக்கு ஏதுங்க இடம், சுந்தர்?’

குமாரின் சித்தாந்தத்தைச் சுமதி ஆமோதித்தாள்; ஆதரித்தாள்.

குமாரும் சுமதியும் அர்த்தச் செறிவுடன் பார்வைகளைப் பரிவர்த்தனை செய்து கொண்டனர்.

"நீங்க ரெண்டு பேரும் ஒரே கட்சி ஆகிட்டீங்க போலே!’ என்று அட்டகாசமாகச் சிரித்தான் சுந்தர். “சரி, புறப்படலாம்; மணி நாலு ஐம்பது ஆயிடுச்சு; அங்கே எங்க சித்தப்பா, சாஸ்திரிகள் சகிதம் நமக்காகக் காத்துக் கிட்டு இருப்பார்,' என்று துரிதம் செய்தான் அவன்.

சுமதி தன் அத்தானை மெல்ல அண்டினுள். அத்தான், ஒரு நிமிஷம் உள்ளே வர் lங்களா?’ என்று வேண்டி,