பக்கம்:சீதைக்கு ஒரு பொன்மான்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154


சுந்தரை உள்ளே இட்டுச் சென்ருள். சுந்தர் தொடர்ந்து வருவதற்குள், உள்ளே புள்ளிமானக ஒடி, கைக் குழந்தையும்

கையுமாகக் கலாபமயிலெனத் திரும்பிளுள். என் கல்யாணத்துக்கு என் தெய்வத்தின் முதல் ஆசீர்வாதத்தை நான் வாங்கிக்கப் போறேனுங்க, அத்தான்!” என்று

உணர்ச்சிகள் ஆரவாரம் செய்யச் சொல்லிக் கொண்டே குழந்தையை அத்தானிடம் சேர்ப்பித்தபின், சுசீலாவின் திருவுருவத்திற்கு நேரே மார்பு பூமியில் பதிய விழுந்து வணங்கினுள். கூப்பிய கரங்களுடன் எழுந்தவள், தன் உயிர்ச் சகோதரியை ஏக்கத்தோடும் உருக்கத்துடனும் ஊடுருவி நோக்கி, அக்கா! எங்களைக் காப்பாற்று, தெய்வமே!’ என்று பிரர்த்தித்தாள்; ஆடிப்புனலுக்கு அணை ஏது? பினேதான் ஏது? அப்பால், ராஜாவை எடுக்கிக் கொண்டு, "ராஜாக்குட்டி, அம்மாவை-உன் அம்மாவைக் கும்பிடு,” என்று விம்மியவாறு, பிள்ளையின் பிஞ்சுக் கரங் களைக் குவித்து வைத்தாள். கண்ணீரைத் துடைத்துக் கொண்டவளுக்கு வயிற்றை என்னவோ செய்யவே, முகச் சுளிப்புடன் வயிற்றைத் தடவித் தடவிக் கொடுத்துக் கொண்டே ஒரு விடிை நின்ருள்; தியான நிலை அடுத்த வினுடியும் தொடர்ந்தது; பிறகு, ஒரு தெளிவு பெற்றவளாக அத்தானை ஆதரவாகப் பார்த்தாள்.

சுந்தர் கூப்பிய கைகளோடு நின்ருன்.

சுசீலாவுக்கென்று அப்படியொரு நிர்மலமான சிரிப்பு எப்படித்தான் அமைந்ததோ?...

1 ம்மல் பொழுது.

விடிந்தும், விடியாத வேளை.

வாடகைக் கார்கள் பூப்பாரம் சுமந்த கோலத்தில் புறப்பட்டு விட்டன.

சென்னைமாநகரம் இத்துணை ரம்யமான பட்டணமா?