பக்கம்:சீதைக்கு ஒரு பொன்மான்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

155


மணமக்கள் இருவரும் பொருள் பதியவும் பொருள் விளங்கவும் பார்த்துக் கொண்டார்கள். அவர்களுக்கு மட்டும் தனிக்கார்; சுற்றமும் நட்பும் சொன்ன ஏற்பாடு,

சுமதி:

என்னங்க???

'ஒண்ணுமில்லை!"

கூப்பிட்டீங்களே?’’

சுந்தர் பதில் ஏதும் கூருமல், தன்னுடன் நெருங்கி அமரும்படி ஜாடை காட்டினன்.

சுமதிக்கு வெட்கமான வெட்கம். கழுத்தில் தாலி ஏருமல், எப்படி நெருங்கிச் சுருங்கி உட்காருவதாம்?

ஊஹூம்'

சுமதியை இழுத்துத் தன்னோடு ஒட்டி உறவாட இறுக்கமாக வைத்துக் கொள்ள வேண்டுமென்றுதான் துடித்தான் சுந்தர். ஆனால், மூன்ரும் மனிதன் ஒருவன் காரை ஒட்டிக் கொண்டிருக்கிருனே?

குழந்தை வீரிட்டகுரல் கேட்கிறது. பின்னுல் வந்த வண்டியில் பாட்டியின் பொறுப்பில் இருக்கிருன் பயல்!

"அத்தான், குழந்தை அழருன்!” 'டிரைவர், கொஞ்சம் வண்டியை நிப்பாட்டுங்க." ராஜா இவ்வளவு நேரம் சுமதியைத் தேடித் தேடித் தான் முகாரி பாடியிருக்க வேண்டும். இப்போது, வந்து சேரவேண்டிய இடத்துக்கு வந்து சேர்ந்ததும், கப்சிப் எ ன்று ஆகிவிட்டான் பேஷ், சமர்த்துப் பிள்ளைதான்!

அதோ, கோயில் கோபுரம் தெரிகிறது!

அத்தான், கருமாரிக் கோயில் வந்திடுச்சுங்க!”