பக்கம்:சீதைக்கு ஒரு பொன்மான்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

157


தோழி சுஜாதா நிழலாய்த் தொடர, நாணிக் குனிந்த தலையுடன், நயம் சொட்டும் நல்ல கவிதை போல அன்ன நடை பயின்று வந்தாள் சுமதி. வளைகள் குலுங்கின; மெட்டிகள் இசைகூட்டின; பட்டுப்புடவை சரசரத்தது. அவளுடைய பொன்னுர்மேனிக்குப் பொருத்தமாக அமைந்து விட்டது ரோஜா நிற ஆரணிப்பட்டு. பொன்மலர்கள் அங்கங்கே பளிச்சிடுகின்றன.

சாஸ்திரிகளை முந்திக் கொண்டு, உட்கார், சுமதி', என்ருன் சுந்தர்.

சுமதி மணமகளாக மணமேடையில் அமர்ந்தாள். குழந்தை ராஜா கண்ணிற்குள் நிற்கிருன்!-சற்றுமுன் தன் பாட்டியின் பிடிக்குக் கட்டுப்படாமல் வீம்பு பிடித்துச் செருமிக் கொண்டிருந்த ராஜாவின் தவிப்பு அவளுடைய கன்னிப் பூமனத்தில் கீறிக் கொண்டிருந்தது.

சுந்தரின் திருஷ்டியில் குமார் சுழன்று கொண்டேயிருந் தான். மாப்பிள்ளைத் தோழன் ஆயிற்றே குமார்?...

மந்திரங்கள் ஒலித்தன.

ஹோமத் தீ ஒளிர்ந்தது.

திடீரென்று ஒரு சலசலப்பு எழுந்தது-எதிர்ப்புறத்திலே!

தொண்டை வறள வீம்புபற்றி அழுததால், குழந்தை ராஜாவுக்குப் பேச்சுமூச்சு இல்லையாம்!

"தாயே!-துடியாய்த் துடித்தாள் சுமதி. ராஜா, கண்ணே ராஜா! நீதாண்டா என்னுேட தெய்வத்துக்கே ஜீவன்!-ஒடிப் போ ய் ராஜாவை வாரியெடுத்துக் கொண்டாள். மயக்கம் தெளிந்து, நல்ல மூச்சு வந்து விடாதா?-தவித்தாள்.

நெஞ்சிலே இடி இடித்தமாதிரி இருந்தது சுந்தருக்கு. நெஞ்சைத் தடவிக் கொண்டான். ராஜா, நீ ஒருவன் இருக்கக் கண்டு தானேடா நான் இங்கே இப்படி வந்து குந்திக் கிடக்கிறேன்!...நீ இல்லேன்ன, நான் செத்த இடத்தில்