பக்கம்:சீதைக்கு ஒரு பொன்மான்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158


என்றைக்கோ புல் பூண்டு மண்டிப் போயிருக்குமேடா! ராஜா!"...உள்ளத்தில் வெடித்த விம்மலேச் சாடிக் கிறுக்கியது: மின்னல் கீற்று ஒன்று!-என் தெய்வம் ராஜா தன் அம்மா மாதிரி கண்ணை மூடிக் கொண்டு விடுவானே?-ஐயையோ!... அப்படி நடந்து விட்டால், நான் என்னுடைய இந்த இரண் டாவது மாப்பிள்ளை வேஷத்தைக் கலைத்துவிட்டு, என் சுமதியை-சுமதியை மிஸ்டர் குமாருக்கே அர்ப்பணம் செய்துவிட்டு விதிவழியே ஒரே ஒட்டமாக ஒடிவிட மாட்டேன?-சுசீலா, உன் ஆசைதான் என்ன? தாயே, உன் முடிவுதான் என்ன?

சாஸ்திரிகள் பரபரப்பு அடைந்தார். குழந்தைக்கு எப்படி இருக்கு? மூச்சு வந்திடுத்தோன்னே? நேரம் ஆகிண்டிருக்கே முகூர்த்த வேளைக்குள்ளே திருப்பூட்டி ஆகனுமே!’ நாலுகட்டைச் சுருதியில் பேசினர். அவர் கையில் மங்கலத் தாலி ஊசலாடுகிறது!...

தெய்வநாயகி அம்மாள் ஓடோடி வந்தான்குழந்தையுடன்.

ஆஹா குழந்தை ராஜா எவ்வளவு குதுரகலப்

பொலிவுடன் சிரித்துக் கொண்டிருக்கிருன், இப்போது.

சுமதி ஆனந்தக் கண்ணிர் சொரிந்தாள்! சுந்தர் நல்லமூச்சை மீட்டுக் கொண்டிருக்கவேண்டும்! 'கெட்டிமேளம்...கெட்டிமேளம்' மங்கலம் நிறைந்த மஞ்சள்நிற அட்சதை மணிகள் நாற்புறமும் பூச்சொரிகின்றன.

சுமதிக்குத் திருப்பூட்டி, மூன்று முடிச்சுக்கள் இட்டான் சுந்தர்!

புதுமணத் தம்பதிக்கு அட்சதை தூவி, திருநீறு பூசி, வாழ்த்துகிருர்கள், வாழ்ந்து காட்டிக்கொண்டிருந்த பெரியவர்கள்.

புதுமணத் தம்பதிக்கு மஞ்சள் ஆரத்தி சுற்றுகிறது: பெண்டிர் குழாம். -