பக்கம்:சீதைக்கு ஒரு பொன்மான்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

159


சுமதி, இப்போது சுமதி சுந்தர்!...

அன்னை சுமதியின் இன்ப அரவணைப்பில் திக்குமுக்காடிக் கொண்டிருந்த ராஜாப்பயலுக்கு கொட்டி அளக்க முடியாத கொண்டாட்டம்தான்!-இருக்காதா, பின்னே?...

சுமதியின் அன்புப் பிடியில் கட்டுண்டிருந்த அருமைப் பிள்ளைக்கு-தவப்புதல்வனுக்கு அருமை பெருமையாக ஆயிரம் முத்தங்கள் ஈந்தான் சுந்தர்.

"அத்தான், ராஜாவைப் பிடிங்க கொஞ்சநாழி', என்று சொல்லிக் குழந்தையைச் சுந்தரிடம் கொடுத்தாள் சுமதி: நேரே குமாரை நாடி நடந்தாள். குமார், என்ன ஆசீர்வாதம்,பண்ணுங்க’, என்று வேண்டினள்.

குமார் சூறைக்காற்றில் அகப்பட்ட சோற்றுப்பனையாக அல்லாடித் தள்ளாடிஞன். 'சுமதி...சுமதி: உன்னை ஆசீர்வதிச்சு வாழ்த்துறதுக்கு உண்டான அருகதை எனக்குக் கிடையாதே, சுமதி...நான் அதிர்ஷ்டம் கெட்டவனச்சே, சுமதி?...' என்று விம்மினன் குமார்.

குமாரை ஏறிட்டுப் பார்த்தாள் சுமதி. குமார், என்னை மனப்பூர்வமாக வாழ்த்துறதுக்கு உண்டான அருகதை

உங்களுக்குத் தாராளமாக உண்டு. ஊம், என்னை ஆசீர்வதியுங்க!' என்று கூறி, குமாரின் பாதங்களைத்

தொட்டுக் கும் பிட்டு எழுந்தாள் சுமதி,

கள்ளமில்லாத சுமதியின் அழகு முகத்தை அன்பு சுரக்க நோக்கினன் குமார். சுமதி, செஞ்ச தவறுகளைப் பெரு மனம்வச்சு மன்னிச்சு அருள்பாலிக்கும் தனிக்குணம் படைச்ச தேவி கருமாரியின் கருணையினலே, நீ எல்லா நலன்களும் சகல செளபாக்யங்களும் பெற்று, நீடுழி காலம் மகராசியாக வாழவேணும், தாயே!” என்று வாழ்த்தின்ை அவன்.

சுமதி மெய்ம்மறந்தாள். மனமாலை மெய்சிலிர்த்தது. ராஜாப்பயல் ஏன் அப்படிச் சிரிக்கின்ருன்?...