பக்கம்:சீதைக்கு ஒரு பொன்மான்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதினெட்டு

முதல் இரவு.

சுந்தர்-சுமதி ஜோடிக்கு இன்றைக்குத்தான் சாந்தி மூகேர்த்தம்:

நீலவானத்தில் நட்சத்திரத் தோழிமார்களோடு சிருங்காரப் பண்பாடிச் சரசசல்லாபம் நடத்தி மகிழ்ந்து கொண்டிருக்கின்ருன் வளர்பிறைச் சந்திரன்.

குழல் விளக்கு பிறந்த மேனியாக ஒளி சிந்தியது!

சுந்தருக்கு இருப்புக்கொள்ளவில்லை; இருக்கை பிடிக்க வில்லை. கழுத்தில் இருந்த மாலையைக் கழற்றிப் பட்டு மெத்தையில் போட்டுவிட்டு எழுந்தான்; பள்ளியறையில் குறுக்கும் நெடுக்குமாக நடக்கத் தொடங்கினன். கைக்கடிகாரத்தைப் பார்த்தான். இன்னமும் பதிமூணு நிமிஷம் இருக்கே சாந்திமுகூர்த்த வேளைக்கு!...சே!...காலம் புள்ளிமான் அப்படின்னு யாரோ சொல்லியிருக்காங்களே? ஆளு, அனுபவபூர்வமாகப் பார்த்தால், காலம் சோப்ளாங்கி’ ஆமையாக்கும்! பருவமனம் துறுதுறுப்புடன் கிளர்ச்சி செய்து கொண்டிருந்தது. காதல் மனம் 'சுமதி...சுமதி: என்று பஜனை செய்து கொண்டேயிருந்தது. திறந்து கிடந்த நடுக்கூடத்தின் வாசற் கதவுகளிலேயே அவனுடைய விழிகள்