பக்கம்:சீதைக்கு ஒரு பொன்மான்.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருபது

முடிவு -அதிர்தானுே?

டுதிதல் இரவுப் பள்ளி அறைதான?-இல்லை, விதியின் சோதனைக் கூடமா அது?

அந்தரங்கமான ஒரு ஜீவனின் கதை ஆந்தரங்கமாகவே முடிந்து விட்டதே?

வழிந்த வெள்ளத்தை வடிகால் மாற்றவும் சிந்தை இழந்து, சுமதியை-பாசமும் நேசமும் உருவான சுமதியை அன்போடும் ஆதரவோடும் பரிவு சூழ்ந்திட நெருங்கின்ை சுந்தர். சுமதியிடம் 'பாவம், குமார்!’ என்று அனுதாபம் மேலிடக் கூறினன்.

வீறு கொண்டாள் சுமதி. சுமதி, சுமதியாக இருக்க வில்லை. "பாவி குமார்னு சொல்லுங்க, அத்தான்!......' ஓங்கார நாதம் பரப்பி, ஆனை பரப்பினுள் அவள்.

சுமதி!'
  • குமார் மாத்திரமே பாவி இல்லீங்க; நானும் கூடத் தான் பாவி! குமாரால் நான் பாவி ஆகிட்டேன்; பாவியாக ஆக்கப்பட்டு விட்டேனே, அத்தான்' குமுறிக் குமுறி அழுது தீர்த்தாள் சுமதி.