பக்கம்:சீதைக்கு ஒரு பொன்மான்.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

177


“குமார்!...” -ஒரே அலறலாக அலறிவிட்டான் சுந்தர், மின்னுமல் முழங்காமல் இடிதான் இடிக்குமாம்!

ஆளுல், சொல்லாமல் கொள்ளாமல் ஒரு ஜீவனின் கண்களும் மூடிவிடுமா?

'ஐயோ, குமார் ஐயையோ, குமார்!...” சுந்தர் புலம் பினன். நட்புக்காக, நட்பு அழுததோ?-கண்களே மூடிக் கொண்டு, நிரந்தரமான நித்திரை வசப்பட்டுக் கிடந்த குமாரை நீர் சோர. நெடுமூச்சு சீறப் பார்த்தான் சுந்தர். என்ன காரியம் செஞ்சிட்டீங்க. குமார்? இப்படிப்பட்ட ஒரு பயங்கர முடிவுக்கு இன்று வரவேணும்னு தான், அன்று அப்படிப்பட்ட ஒரு பயங்கரப் பாவத்தைச் செய்யத் துணிஞ். சீங்களா?'-கதறினன் சுந்தர். ஐயோ குமார்!...உங்களுக் கென்று காத்திருந்த சுமதியை நான் பறிச்சுக்கிட நேர்ந்த ஒரு பாவத்துக்கு-அல்ல, தவற்றுக்கு-ஊஹாம், விதியின் விளையாட்டுக்கு ஈடுகட்டிப் பரிகாரம் தேடிக்கிட, என்ளுேட அன்புச்சுமதியைக் கலந்து ஆலோசிச்சு, என்னுடைய இந்தப் புதிய மணவாழ்க்கையை உங்களுக்கும் பகிர்ந்தளிக்க வேணும்னு நான் சிந்திச்சுக்கிட்டு இருந்தேனே, குமார்? கடைசியிலே, நீங்க உங்களுக்கும் விதியாக ஆகிட்டீங் களே?...-அதிதமான உணர்வுகள் அவன் நெஞ்சைச் சில்லிட்டுப்போக வைத்தன!...

சுமதி பிரமை பிடித்தவளாக நின்ருள்; அவளுடைய அழகான கண்களினின்றும் உதிர்ந்த இரண்டு கண்ணிர்த் துளிகள் குமாரின் மூடிக்கிடந்த கண்களின் இமைகளில் பாகம் பிரிந்து சிதறின. விதி யாரை விட்டுச்சாம்?-ம்... என்னை முந்திக்கிடுச்சே விதி?...பற்களை எரிச்சலுடன் கடித் துக் கொண்டாள் அவள்.

சாளரங்களின் வழியே, எரியும் நிலவு தெரிகிறது!

ஒரு ஜீவனின் சோகக் கதை காதும் காதும் வைத்த மாதிரி முற்றும் பெற்றுவிட்டது: -