பக்கம்:சீதைக்கு ஒரு பொன்மான்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176


சுமதி, சுமதியாக ஆளுள். உள்ளமும் உடலும் நடுநடுங்கி வெலவெலக்கச் சுந்தரை அண்டினுள். மனமறிந்து செய்யாத குற்றத்திற்கு மணமறிந்த தண்டனையாகப் பயங் கரப் பழியைச் சுமக்க நேர்ந்த அவமானத்தால் கூனிக் குறுகிய கன்னி தன் தாயை பயத்தோடும் பரிதாபத்தோடும் பார்க்கிறமாதிரி, சுந்தரைப் பார்த்தாள் சுமதி, மேல் மூச்சு கீழ்மூச்சு வாங்கியது.

சுந்தர் தன் கண்ணிரை மறந்தான்; சுமதியின் விழிநீரை விலக்கினன்; அவிழ்ந்திருந்த கூந்தலை அள்ளிக்கோதி முடிந்து விட்டான்; கருணை மண்டிய கண்களால் அவளே-தன் மனைவியை ஆதரவாகப் பார்த்தான் அவன். சுமதி: குமாரை-மிஸ்டர் குமாரை நீயும் மன்னிச்சிடு, சுமதி!...” கெஞ்சுதலோடுதான் கேட்டுக்கொண்டான்.

மலைத்தாள் சுமதி, அவள் திகைப்பு மேலும் வளர்ந்தது; கூடியது. அப்படின்ளு, குமாரை அத்தான் மன்னிச்சிட்டா ரென்று அர்த்தமா? குமார் பாவி!...பாவிகளே ரட்சிக்க ஏசு பிரான் சிலுவையைச் சுமக்கலாம். ஆளுல், பாவி குமாரினல் பாவியாக்கப்பட்டுவிட்ட நான்-அபலையான நான் குமாரை எந்த நியாயத்தில்-எந்த உறவில்-எந்த உரிமையில் மன்னிக்க வேணுமாம்?... மன்னிக்க முடியுமாம்? மனசறிஞ்சு செஞ்ச அநியாயக் குற்றத்துக்கு உரிய தண்ட னையைக் குமாருக்கு அளிக்காமல் தப்பவே மாட்டேன்!... மனசறிஞ்சு செஞ்ச அந்தப் பயங்கரப் பாவத்துக்கு உரித் தான தண்டனையை குமார் அடைஞ்சுதான் தீரனும்!.. விட்டகுறை தொட்டகுறை யாரைத்தான் விட்டது? தீப்பிழம்புகள் கண்களிலே மின்னின.

அப்போது

சுந்தர்!...”

விம்மிப் புடைத்தவண்ணம், சுந்தரிடம் சரண் புகுந்தான் குமார். அவன் வாயிலிருந்து வெள்ளை வெள்ளையாக நுரை கொப்புளித்துக்கொண்டேயிருந்தது. உதட்டுக் கரைகளில் அங்கங்கே பச்சைநிறத் துகள்கள் கரை சேர்ந்தன.