பக்கம்:சீதைக்கு ஒரு பொன்மான்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

175


தலைவிரிகோலமாளுள் சுமதி. துறுதுறுத்த கைகளைக் குமாரின் கழுத்திலே பதித்தாள்; பற்கள் இடி முழக்கம் செய்தன: “குமார், எனக்கு விதிவசமாக ஏற்பட்ட களங் கத்தை என்ளுேட அன்பு அத்தான் மன்னிக்கவிே செய்வாங்க; அது எனக்கு நன்ருகத் தெரியும். ஆனல், என்னை நான் மன்னித்துக் கொள்ளப்போறதில்லை!-ஏன் தெரியுமா? எனக்கு நானேதான் விதி ஆகவே, மகாத்மா விளுலேகூட மன்னிக்க முடியாத உங்கமாதிரிச் சமுதாயத் துரோகிகளை இந்தத் தமிழ் மண்ணிலே இனியும் விட்டு வைப்பது ரொம்பத் தப்பு-பெரும் பாவம் அது!...நீங்க எனக்கு வாய்த்திட்ட முதல் புருஷன் இல்லையா குமார்?...ம் ...இப்ப பேசுங்கi.ஊம், பேசுங்க, குமார்!’ என்று ஒலம் பரப்பிக் குமாரின் நடுங்கிக்கொண்டிருந்த கழுத்திலே பதிந் திருந்தகைகளை மூர்க்கத்தனமான ரத்த வெறியோடு பல்லைக் கடித்த வண்ணம் அழுத்திக் கொண்டிருந்தாள் சுமதி.

கல்லுக்குச் சாப விமோசன் கிட்டியது போலும்...

சுயப் பரிசோதனை நடந்து முடிந்து விட்டதா?

சுந்தர் திடுக்கிட்டுச் சிலிர்ப்படைந்தான். குறைகுடங் களாகக் கண்கள் தளும்ப, 'சுமதி!.குமாரைக் கொன்று விடாதே, சுமதி!' என்று கூக்குரலிட்டபடி, பதறித் துடித்

துப் பாய்ந்து சுமதியைத் தடுத்து, குமாரை விலக்கி விட்டான்! -

அங்கே:

விடுதலை அடைந்த குமார் மீண்டும் தனக்குத்தானே சிறைப்பட்டுவிட்டமாதிரி உருகிக் கரைந்துகொண்டிருக் கிருன் கைகள் சட்டைப் பையைத் துழாவிக்கொண்டிருக் கின்றன. கழுத்தில் முத்திரை பதித்திருந்த நகக் கீறல்களி விருந்து ரத்தத் துளிகள் சிந்திச் சிதறிக்கொண்டே இருக் கின்றன:

இங்கே :