பக்கம்:சீதைக்கு ஒரு பொன்மான்.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174


அலக்காகத் தூக்கி நிறுத்தினுள் சுமதி. விழிகள் புடைக்க, நெஞ்சம் துவள அவனை நோக்கிள்ை; ஊடுருவி நோக்கினுள், அவனே ஒரே விழுங்காக விழுங்கிவிடத் துடித்தவளாக அப்படி நோக்கினுள். சுடுநீர் மணிகள் குருதிச் சொட்டுக் களாக வடிந்தன; நெஞ்சிடை மையம் கணித்து, ஆரோ கணித்துக் கிடந்த திருமாங்கல்யத்திற்கு அவை ஆத்ம நிவேதனம் ஆயின, எழிலார்ந்த இளம் மார்பகம் எம்பீ எம்பித் தாழ்ந்தது; குமாரின் உஷ்ணக் காற்றை மேலும் நெருக்கமாக அனுபவித்தாள் அவள்; துடித்த உதடுகளை விலக்கிவிட்டாள் :

"மிஸ்டர் குமார் ஒரு பொய்மான், ஒரு பொன்மான் ஆகி, சீதைக்கு விதியாச்சு!-அந்த விதியை அனுபவிக்க வேண்டிய தலைவிதி சீதாப்பிராட்டிக்கு ஏற்பட்டுச்சு!... ஆஞல், நீங்க ஒரு பொன்மாளுக என்வரை விளங்கின பொற் காலம் ஒன்று இருக்கத்தான் இருந்திச்சு. பின்னலே, என்னுடைய விதிக்கு என்ைேட தெய்வம் சுசி ஒரு ஆணை யாக ஆனதுக்கப்புறம், நீங்க எனக்குப் பொய்மானுகவும் ஆக நேர்ந்திடுக்க. ஆகவே, எனக்கு நானே விதி ஆனேன்!,.. ஆனல், கடைசியிலே, நீங்களே எனக்கு விதியாக ஆகிவிட் உங்களே, குமார்?...ஐயையோ, பாழுந் தெய்வமே!...”

குமார் கல்லாக-வெறும் கல்லாகச் சமைந்துவிட்டான்!

கணங்கள் பேய்க் கணங்களாக உருண்டுகொண்டிருக் கின்றன.

சுமதி அழுகையை நிறுத்திவிட்டுச் சிரித்தாள்.

அறுபடி ஒங்காரக்காளி சிரிக்கத் தொடங்கிவிட்டானா?

குமாரின் தலை முடியைப் பற்றியிருந்த பிடியை விலக் கிளுள் சுமதி. அவளுடைய கண்களினின்றும் சுடர்தெறித்த தி நாக்குகளை அவன்மீது வீசினுள். குமார்! பேசுங்க இப்போது ஊம், பேசுங்க!' என்று ஆணையிட்டாள் சுமதி.

குமார்தான் கல்லாகிவிட்டானே, பாவம்?