பக்கம்:சீதைக்கு ஒரு பொன்மான்.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180


இதிலே உனக்கு என்ன சந்தேகம் வந்தது, சுமதி?..... 茨r என்னை நம்பு, சுமதி......நான் உன்னைச் சத்தியமாக மன்னிச்சிட்டேன், சுமதி!...” விம்மல் தொடர்ந்தது.

'ஆஹா அப்படீங்களா, அத்தான்?-நீங்க என்னைச் சத்தியமாக மன்னிச்சிட்டவரை சந்தோஷமேதான்!..... ஆனல், நீங்க என்னை மன்னிக்கும்படியாக நான் செஞ்ச தவறு என்னவென்று தயவு பண்ணி உங்களாலே சொல்ல முடியுங்களா, அத்தான்?’

தூண்டிற் புழுவாகத் துடித்தான் சுந்தர்; துடி துடித் தான்!-சுமதி!......சுமதி!...' மேற்கொண்டு சொற்கள் பிறந்தால்தானே?

சுமதி விரக்தியின் உச்சக்கட்டத்தில் நின்றவளாகச் சிரித்தாள்; ஆற்ற முடியாத வேதனையுடன் சிரித்தாள், கண்கள் நிர்மலாக விம்மின.

சுந்தர் உணர்ச்சி வசப்பட்டுச் சுமதியின் அன்புக் கரங்களை நடுங்கிக் கொண்டிருந்த தன்னுடைய கைகளால் பற்றிக் தன் கண்களிலே ஒற்றிக் கொண்டு, சுமதி நீ குற்றமேதும் செய்யாதவள்; ஒரு பாவமும் அறியாத உத்தமி நீ!...நீதான் என்னை இப்போது மன்னிக்க வேணும், சுமதி!' என்று அழுது புலம்பிக் கரைந்தான். சுமதி மனத்தின் நிறைவுடன் சிரித்தாள்! கணம் ஒன்று, ஒரு புகமெனக் கழிகிறது.

கைக் கடிகாரத்தை விநயம் பூக்கப் பார்த்தபின் சுமதி பேசினுள்: நேரம் ஆகிக்கிட்டு இருக்குது; எனக்கு விடை கொடுங்க, மிஸ்டர் சுந்தர்!’

கால் பாவி நின்ற மண் திடீரென்று தன்னைக் கபளிகரம் செய்து மண்ணுக்கிக் கொண்டதோ என்ற பயத்தில் திக்கு முக்காடிப் போனன் சுந்தர்! ஒரு மாத்திரைப் பொழுதுக்குப் பின்னர், நீ எங்கே போகப் போகிருய்?’ என்று அதிர்ச் சியைத் தாளமாட்டாமல் கேட்டான் அவன்.