பக்கம்:சீதைக்கு ஒரு பொன்மான்.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

181


சுமதி நிதானமான அமைதியுடன், ஆனால், தீர்மான மான குரலில் பேசலாளுள் அளவுக்கு மீறின நல்லவரான உங்களோட அன்பு நிழலிலே நிம்மதியோடு தங்குறதுக்கு எனக்கு அருகதை இல்லேன்னு என் மனச்சாட்சி எனக்கு முடிவு சொல்லிடுச்சுங்க; நான் என் வழியே புறப்படப் போறேனுங்க!.....என்னுடைய புனிதத்துக்கும் கற்புக்கும் மானத்துக்கும் பெண்மைக்கும் களங்கம் உண்டாக்கி, என்னேட வயிற்றிலே வளர்ந்துக்கிட்டிருக்கிற அந்த அவமானச் சின்னத்தைக் களைஞ்செறிஞ்சிட்டு, நான் என் விதி வழியே போயிடப் போறேனுங்க!...” கழுத்திலே ஊசலாடிக் கொண்டேயிருந்த திருமாங்கல்யத்தை கை விரல்கள் நடுங்க நெருடி அழகு பார்த்துக் கொண்டிருக் கிருள் சுமதி.

மீண்டும் கல்லாய்ச் சமைந்தான் சுந்தர்!

முட்ட நனைந்த பின், குளிர் ஏது?

சுந்தருக்குச் சுயப்பிரக்கினை மீண்டிருக்க வேண்டும்: 'இதுதான் உன் முடிவா, சுமதி?-இதுவேதான் உன்னேட கடைசி முடிவா, மிஸ் சுமதி?”

"ஆமாங்க...தயவு பண்ணி என்ன நீங்க மன்னிக்க வேணும்...!-சுமதியின் கைகளிலே இப்போது அவளுடைய கழுத்துத் தாலி விதியாகக் கண் சிமிட்டிக் கொண்டி ருந்தது!....

"ஆல்ரைட்! நீங்க புறப்படலாம், மிஸ் சுமதி!' சுமதியின் விம்மல் நான்கு சுவர்களுக்குள்ளே ஒலித்து, எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. சுந்தர் நின்ற திசை நோக்கிப் பூங்கரங்களைக் குவித்தாள்; சுமதியின் அழுகை ஒலம் வளர்ந்தது. "ஒரேயொரு வரம் மாத்திரம் நீங்க எனக்குத் தரவேணும்!...”

சுந்தர் அட்டகாசமாகச் சிரித்தான். வரம் கொடுக் கிறதுக்கு நான் ஒன்றும் தெய்வம் இல்லையே?’ என்று நிர்த் தாட்சண்யமான குரலில் விச்ைசரம் தொடுத்தான் அவன்.

சீ-12