பக்கம்:சீதைக்கு ஒரு பொன்மான்.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184


சாட்சிக்கு முன்னே ஊரும் உலகமும், சமுதாயமும் ஜனங் களும் துச்சம்... எனக்கு வரம் கொடு, சுமதி...ம். பேசு பெண்ணே!...பேசு, சுமதி, பேசு!...”

முந்தித் தவமிருந்து பெற்ற அன்னேயிடம் ஒரு கைமுறுக்குக்காக அடம் பிடித்து அழுது தீர்க்கும் கள்ள மில்லாப்பாலகளுகக் காட்சியளித்தான் சுந்தர்.

"ஐயோ, அத்தான்....கடைசியிலே, நீங்க என்ன இப்படியா சோதிக்க வேணும்?...அன்றைக்கு என் அக்கா வாயைத் திறக்காமல் இட்ட ஆணே எனக்கு வாழ்க்கை ஆச்சு..இன்றைக்கு நீங்க வாயைத் திறந்து இடுகிற கட்டளை என் ஜீவனுக்கு விதி ஆயிடுச்சுங்களே, அத்தான்?...என் முடிவே புதிர்தான?-என் வாழ்க்கையே ஒரு விடுகதை தான? ஐயையோ, தெய்வமே!...ஐயையோ, அத்தான்!... என் தெய்வமே!...”

சுமதி, இப்போது அதே முதலிரவுப் பள்ளியறையிலேயே பேச்சு மூச்சின்றிக் கிடக்கிருள்... 'சுமதி!...என் தெய்வமே!...”

அதோ, லேடி டாக்டர் பாலாமணி... தயவு செய்து யாரும் சத்தம் போடக் கூடாது!...

முடிகிறது.