பக்கம்:சீதைக்கு ஒரு பொன்மான்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

23

சுமதியின் கட்டித்தனமும் குறும்புப் போக்கும் சுந்தருக்கு எப்போதுமே இஷ்டம்தான். நன்றியறிவுப் பண்பை அவள் ஆராதனை செய்யும் விதம் அவனே வியப்படையச் செய்வது வழக்கம். அவனுடைய சிந்தனை இப்போது குமார் பேரில் நிலைத்தது. குமார் ன்றால், சுமதிக்குக் கொள்ளை அன்பு!—அவள் உள்ளத்தைக் கொள்ளை கொண்டவன்: ஆயிற்றே?—தஞ்சாவூரிலே ஒரே பள்ளிக்கூடத்தில் பணி. ஒருவருக்கொருவர் சோதித்து, புடம் போட்டு, உரைத்துப் பார்த்துக் கொண்ட குணநலன்கள் காதலர்கள் இருவரின் அன்பையும் நேசத்தையும் மேலும் இறுக்கமடையச் செய்திருக்கலாம். போன திங்கட்கிழமை சுசீயை இங்கே ‘அட்மிட்’ செய்த செய்தி கிடைத்துச் சென்னையிலிருந்து பறந்துவந்த போதுதான், அவன் குமாரைச்சந்தித்தான், மைத்துனி வாயிலாக. சுசீலாவின் ஒப்புதலுக்காகத் தவம் இருக்கும் துப்பையும் இவன் அறிவான். தங்கை என்றால் பிராணன் ஆயிற்றே அக்காள் காரிக்கு!—‘ஓ. கே’ சொல்லாமலா இருக்கப் போகிறாள்?--காதலுக்குத்தான் ஜாதி, மதமெல்லாம் கிடையாதே, ரொம்பக் காலத்திலிருந்தே!...

சுமதிக்குக் காப்பி உள்ளே போனவுடன், ஏப்பம் வெளியே வரலாயிற்று. “அத்தான், எங்க காதலும் கலியாணமும் அக்கா சொல்லப் போகிற தீர்ப்பிலேதான் விதியாக ஊசலாடிக்கிட்டு இருக்குதுங்க,” என்று கூறினாள். சலனமும் சலனம் தாண்டிய சாந்தியும் அவளது கவர்ச்சியான விழிக்கணைகளிலே கனைதொடுத்தன. “எங்க சுசீ நல்ல அக்காளாக்கும்; நல்ல வாக்கையேதான் கொடுக்கும்; ஆனால் கூட, உள்ளுக்குள்ளே என்னமோ ஒரு பயம் துளைச்சுக்கிட்டே இருக்குதுங்க, அத்தான்! எல்லாம் நல்லபடியாய் அமைஞ்சிட்டா, இந்தத் தை முடியறதுக்குள்ளாறவே கல்யாணத்தையும் முடிச்சிடலாம். அம்மாவுக்கும் அதுதான் ஆசை. மனுஷக்காயம் என்ன நிச்சயமுங்க?” கைளின் அபிநயத்தில் கைவளையல்கள் குலுங்கின. தானும் குமாரும்