பக்கம்:சீதைக்கு ஒரு பொன்மான்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

25

காதலர்கள் எதிர்ப்பட்டனர்.

அக்கா தன் காதலுக்குப் பச்சைக்கொடி காட்டிவிட வேண்டுமேயென்று தவித்தது சுமதியின் கன்னிப்பூமனம், கடைசியிலேதான் அந்தக் கடிதத்தை அக்காவிடம் காண்பிக்க வேணும் அதுதான் நல்ல சஸ்பென்சுக்கு நல்ல சகுனமாக்கும்1-அவள் தன் லயத்தில் சிரிப்பில் ஆழ்ந்தாள். .

"நீ மட்டும் சிரிச்சுக்கிறியே, சுமதி?"

"இது என் சொந்தச் சிரிப்புங்க!”

"உன் சொந்தச் சிரிப்பிலே நான் பங்கு கொள்ள வேளுமா?”

“நல்லா வேணும்; மேளதாளத்தோடவும் வேணுமுங்க, அத்தான்! என் வாழ்க்கைக் கட்டத்திலே ஒரு சஸ்பென்ஸ் தோணுச்சுது. நினைச்சேன், சிரிச்சேன்! அவ்வளவுதான் கதை'

"ஓஹோ! உன் காதலர் மிஸ்டர் குமார் விஷயமோ?”

"அதுதான் சிதம்பர ரகசியமாயிடுச்சே, அத்தான்! வேருெரு சமாச்சாரம், அதைப்பற்றி உங்ககிட்டே வெளியிட ஒரு காலம் வரும்; அது வரைப் பொறுத்திருங்க, அத்தான்!”

"சரி, வேகமாக நட, சுமதி!"

அவள் வேகமாக நடந்தாள்; ஆனால், நல்ல காலம், வேதனை ஏதும் நடந்துவிடவில்லை; கீழ நாலாம் வீதி மடக் கத்திலிருந்து அசுரவேகத்தில் பறந்து வந்த சவுக்குக் கட்டை லாரி ஒன்றுக்கு இதயபூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொண்டாள் அவள்; என்ருலும், விதி யாரையும் விடாது என்பதற்கு அடையாளம் காட்டிய காவலரின் நெருக்கடி நிலை"யின் விதிக்கும் அந்த லாரி தப்பி விடவில்லையென்ற உண்மை நிலையையும் அவள் நிதர்சனமாகக் காணவும் நேர்ந்தது.

"சுமதி, உனக்கு ஆயுள் கெட்டி!"