பக்கம்:சீதைக்கு ஒரு பொன்மான்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

41

மாகப் பிய்த்துக்கொண்டு கதறினான். திடுதிப்பென்று பெருங்குரலில் பிசிறு தட்டி அழ ஆரம்பித்த அருமைப்பிள்ளையின் திக்குக்கு அவன் திரும்பினால்தானே? குழந்தை என்ற ஒரு பொருள்--ஒரு ஜீவன் தனக்கென உண்டு என்கிற சத்தியம்--தருமம்--பிரக்ஞை இல்லாதவன் போலவே, அவன் அழுகையைத்தொடர்ந்தான்; அழுகை அவனேத் தொடர்ந்தது. இத்தனை ஆர்ப்பாட்டத்திற்கும் இருமல் சும்மா இருக்குமா? குடைந்தது.' விலாக்குடை' எலும்புகள் பளிச்சிட்டுத் தெரியும் வகையில், கேவிக் கேவி இருமினான்.

தயாராகவே கொணர்ந்து வைத்திருந்த குவளைத் தண்ணிரை நீட்டினாள் மைத்துனி சுமதி; அவளது குவளை மலர்க்கண்களில் கண்ணிர் நிற்கவும் நிலைக்கவும் இடம் இருந்தால்தானே? அத்தானின் மார்பைத்தடவிக்கொடுக்கக் கொடுக்க, இருமலின் நரகவேதனை லேசாகக்குறைய ஆரம்பிக்கவே, அத்தானின் விழிகள் ஆற்றாமையுடன் இறுகி விட்டதைக்கவனித்த சுமதியின் மனம்--கன்னி மனம் ஆறுதலடையவே செய்தது. குழந்தை வீரிட்டது ஞாபகம் வரவே, பின்புறம் திரும்பினாள்; தன் அன்னைபேரனை அமைதிப்படுத்திக் கொண்டிருந்ததைக் கண்டாள். குழந்தைக்கு 'க்ளாக்ஸோ' கரைத்துப்புகட்ட வேண்டும். அந்திப் பொழுதில் வழக்கம் போலவே வீட்டின் உடைமைக்காரி உமையாள் வந்து குழந்தையை உச்சிமோந்து விடைபெறும் சமயத்தில், சமய சஞ்சீவியென ஓர் ஆறுதல் வாக்கை வீசிவிட்டுச்சென்ற நிகழ்ச்சியையும் அவளால் மறக்க இயலாதுதான். 'பெத்த ஆத்தாளேச்' சாகடிச்ச பிள்ளைக்கு ஆயுசை எழுதிப்போடுவான் ஆண்டவன் அப்படின்னு எங்க செட்டி நாட்டுப்பக்கத்திலே சொல்லிக்கிடுவாக, சுமதிப்பொண்ணே, நீயும் உன் சுந்தர் அத்தானும் குழந்தை சகிதம் தீர்க்காயுசுடன் ரொம்பக்காலம் நல்லபடியாய் வாழ்வீங்க. சுமங்கிலி ஆச்சி செப்புறதை மனசாலே நம்புடி, ஆத்தா!'-முந்தித் தவம் இருந்து, ஈரைந்து மாதம் சுமந்தும் காத்தும் பெற்ற தாயை என் கண்மணி ராஜாக்குட்டியா சாகடித்தான்? சே! அநியாயப்