பக்கம்:சீதைக்கு ஒரு பொன்மான்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆறு


ஆணேசைசாச்சி

சுமதிக்கு இருப்புக் கொள்ளவில்லை. சோகச் சுமை கண்ணிராக, ரத்தக் கண்ணிராக உருகி வழிய, குழந்தைத் தனமான பார்வையைப் பரிவுடன் அத்தான் பேரில் பதித்தவாறு, "ஆமாங்க, அத்தான்! சுமதிதான்!” என்று விடை மொழிந்தாள். அக்காளை ஆசையோடு எதிர்பார்த்திருப்பார் அத்தான்!---ஐயையோ, பாழாய்ப்போன விதியே!

சுந்தர் தொடுத்தகண் எடுக்காமல்---வைத்த விழி வாங்காமல் சுமதியை இன்னமும் பார்த்துக் கொண்டேயிருந்தான். பிறகு, பார்வையைத் திசைமாற்றி, குடியிருப்பு மனையின் நான்கு சுவர்ப்பகுதிகளையும் துழாவினான்; அப்பால், சூன்யத்தைச்சாடியவனாக, சுற்றுமுற்றும் நோக்கினான். கடைசியிலே, அவன் கண்கள் அண்ணுந்து வான் வெளிக்குத் தாவின. அங்கேதான் அவன் தன்னுடைய இன்னுயிர்த் துணைவி சுசீலாவைத் தரிசித்திருக்க வேண்டும். அரைப் புன்னகை பாதி உயிர்கொண்டு அவனது காய்ந்திருந்த உதடுகளில் ஊரத் தொடங்கிற்று. "சுசீ!...அன்புக் கண்ணே சுசீ!...ஐயோ, சுசீலா!" மண்டையில் ஓங்கி ஓங்கி அடித்துக்கொண்டு அலறினான் தலைமுடியை மூர்த்தண்ய