பக்கம்:சீதைக்கு ஒரு பொன்மான்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

39

அவசரம் அவசரமாகக் கூஜாவைக் கவிழ்த்து, தம்ளரில் நீரை நிரப்பினாள் சுமதி சிவப்பு மாத்திரையை விழுங்கத் தண்ணிர்த் தம்ளரைக் கையிலேத்தினால் சுசீலா, அக்காட்சி படமெடுத்துப் படம் காட்டியது போலிருக்கிறது!--- "சுசி அக்கா!" என்று வீரிட்டவாறு, தண்ணிர் நிரம்பிய தம்ளருடன் அத்தானை நாடி ஒடினாள். சாய்வு நாற்காலியில் பேச்சு மூச்சின்றிக் கிடந்த சுந்தரின் காலடியில் குனிந்து அமர்ந்தாள். தமிழ் மண்ணிலே ஜனதிபதி ஆட்சி அமல் நடத்தப்பட்ட செய்தியைத் தாங்கிய பத்திரிகை அடங்கிக் கிடந்தது!

அப்போது:

சுழன்ற மின்விசிறிக் காற்றலைகளிலே, என்னவோ படபடத்த சத்தம் கேட்டது.

சுமதி கூர்த்தமதி பதித்துப் பார்வையை ஒடவிட்டாள்.

நடுங்கிக் கொண்டிருந்த சுந்தரின் கைகளில் கடிதம் ஒன்று படபடத்து, ஊசலாடிக் கொண்டேயிருந்தது.

குழல் விளக்கு எரிகிறது.

"கசி! நீ எனக்கு அக்காமட்டும் இல்லே!---எனக்கு நீ தெய்வமும் கூட!”

மனம் விட்டும் வாய் விட்டும் கதறியழுதாள் சுமதி.

சுந்தர் 'சடக்'கென்று விழித்துக் கொண்டான்: "ஆ! சுமதியா?” என்றான்!... .