பக்கம்:சீதைக்கு ஒரு பொன்மான்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38

சுந்தர் எட்டு ஊருக்குக் கேட்கும்படி பயங்கரமாக இருமினான்.

அம்மாவைச் சாந்திபெறச் செய்ய நேரம் கிடையாது.

சுமதி, "அத்தான்!" என்று பாய்ந்தோடினான்.

சுந்தர் வேர்க்க விறுவிறுக்க, தூண்டில் புழுவாகத் துடிதுடித்துக் கொண்டிருந்தான். கண்கள் இரண்டும் சிவந்தும் வீங்கியும் போயிருந்தன. நெஞ்சு கூடெடுத்துக் காணப்பட்டது. முகமெங்கும் ரோமங்கள் சிலிர்த்து நின்றன. அப்பொழுது ராட்சத இருமலின் கொடுமை சற்றே தனித்திருந்த நேரம்.

"அத்தான்!”


"அத்தான்! அத்தான்!” என்று அழைத்தாள் சுமதி; கலவரமும் கலக்கமும் பின்னிப் பிணைந்தன.

மூச்!---

"அத்தான்”, என்று விளித்தவளாக, அவனுடைய தோளேத் தொட்டு உலுக்கினாள் சுமதி.

"நான் இங்கேயேதான் இருக்கேன், சுசீ!...உன்னைத்தான் காணோம்!---அதுதான் தேடிக்கினா இருக்கேன்!” யதார்த்தமான தொனியில் சொன்னான் சுந்தர்.

"அக்கா!" என்று வெடித்தாள் சுமதி.

"சுசி திரும்பிவிட்டாளா? பேஷ்!” என்று மகிழ்வுடன் கேட்டுக் கொண்டே, கண்களை ஆவலும் ஆதுரமும் ஆரத்தழுவ, அகலத்திறந்து பார்த்தான் சுந்தர். விரிந்த கண்கள் விரிந்த நிலையில் ஒர் அரைக்கணம் ஊசலாடின; மறுவினாடி, அவன் கண்கள் மூடின; இதுதான் சமயமென்று, இருமல் வேறு புறப்பட்டுத்தொலைத்தது.