பக்கம்:சீதைக்கு ஒரு பொன்மான்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

37

பல்லிலே படாமல் வைராக்கியத்தோட பேயடிச்சாப்பிலே இருந்த இடத்திலேயே இருந்துக்கிட்டு இருக்கிற சங்கதி பக்தி உன்கிட்டே கலந்து பேசத்தான் இப்ப நான் வந்தேன்," என்று விளக்கினாள் அம்மா.

மணி எட்டரை.

சுமதி என்ன செய்வாள், பாவம்?---வேளைக்கு நூறு முறையாவது அத்தானைச் சாப்பிடச் சொல்லிக் கெஞ்சிக் கூத்தாடுவாள். சுந்நர் அசைந்தால்தானே?--அசைந்து கொடுத்தால்தானே? அவனுடைய அந்தப் பயங்கர மெளனத்தைக்கண்டு, அவள் புழக்கடைப்பக்கம் போய் ஒவ்வொரு தரமும் அழுது புலம்பிவிட்டுத்தான் வருவது வழக்கம். அத்தகைய சோதனைப் பொழுதுகளிலெல்லாம் அவள் இதயத்தில் அந்த ஒரு காட்சியும் தோன்றவே செய்யும். தன்னுடைய கைகளிலே தன் அத்தான் சுந்தரை அக்கா சுசீலா ஒப்படைத்துவிட்டுக் கண்ணே மூடிக்கொண்ட சம்வத்தை அவள் மறக்கவில்லை; மறக்கமாட்டாள்; மறக்கவும் முடியாது. 'வாஸ்தவந்தான்!'-அவளது உள் மனம் உள் வட்டம் சுழித்து இவ்வாறு சொல்லிக்கொண்டது. ஏதோவொரு புதிய யோசனை தோன்றவே, தனக்குத்தானே தலையை உலுக்கிக் கொண்டாள். தளும்பிய கண்களைச் சுங்கடி முன்றானை கொண்டு துடைத்தாள், நல்லது---கெட்டது எதைப்பற்றியுமே அக்கறைப்படாமல், ஆபாசப்படாமல் இருக்கும் உண்மைத் துறவி மாதிரி தொட்டிலில் குழந்தை கண் வளர்ந்து கொண்டிருந்த அழகை அப்போதும் ரசித்தவளாக, இரண்டாம் கட்டுக்கு நடந்தாள். சோளியில் உறுத்திய வண்ணம் இருந்த அந்தக் கடிதம் அந்தக்கைத் நொடிப்போதில் குமாரையும் நினைவுறுத்தத் தவறிவிடவில்லைதான்! விரக்தியான முறுவல் கீற்று இதழ்க்கரைதனில் இழைந்திட, அந்தக் கடிதத்தை அவள் கையில் எடுக்க முனைந்தாள்.

அப்போது: