பக்கம்:சீதைக்கு ஒரு பொன்மான்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36

சுசீலாதான் இப்போது பொய்யாய்---கனவாய்---பழங்கதையாகி.விட்டாளே?--பாசம் பொல்லாதது!...

மண்ணடிச் சந்தடி குறைகிறது.

ராமசாமித் தெருவுக்கு இயல்பிலேயே ஒர் அமைதி.

அரவம் கேட்டதுதான் தாமதம்; அரவம் கண்ட பாவனையில் திடுக்கிட்டாள்; திரும்பினாள்; அவள்---சுமதி. கண்ணிர் பார்வையை மறைத்தது; கையில் படபடத்த அந்தக் கடிதத்தை மீளவும் சோளிக்குள் திணித்துக் கொண்டாள்; நெஞ்சின் அத்து மீறிய துடிப்பை அவளது வலதுகைத் தொட்டுணர்வு தொட்டுக் காட்டியிருக்கக் கூடும். "நீ சாப்பிடம்மா", என்று வேதனையுடன் அழுத்தமாகக் கூறினாள். இரண்டு நாழிகைப் பொழுதுக்கு முந்தி, பெற்றவள் உற்ற பரிவுடன் தன்னை உண்ண அழைத்த பாசம் அவளுக்கு மனப்பாடம்.

தெய்வநாயகி அம்மாள் பதில் ஏதும் சொல்லாமல், இரண்டாவது மகளே ஏக்கமும் சோகமும் சூழ்ந்திட நோக்கினாள்; "வயசுப் பொண்ணு நீயே சாப்பிடல்லே; வயசான எனக்கு மாத்திரம் சோறு ஒரு கேடாக்கும்?" என்றாள். மனக் கண்ணில், இளைய புத்திரியிடம் மாப்பிள்ளையை சுசீலா ஒப்புவித்த ஆஸ்பத்திரிக் காட்சி மறுபடியும் நிழலாடியது.

வீசுந் தென்றலின் கைவீச்சில், நரைமுடிக் கொத்துக்கள் பிறை ஒளியில் பளபளத்த பரிதாபக் காட்சியைத் தவிர்க்க மாட்டாதவளாகி, "வயசான காலத்திலே கடைசிப்பட்சம் ராச்சோறு கொஞ்சமாச்சும் உண்ணு அம்மா", என்று கெஞ்சினாள் இளையவள்.

அவள் தலையை ஆட்டிவிட்டாள், எதிர்மறைக் குறிப்பில். "அரிமளத்திலே சுசியோட பதினைறாம் நாள் காரியம் முடிஞ்சு இப்ப இங்கிட்டு பட்டணத்துக்கு வந்தும் மூணு நாலு நாள் ஆயிடுச்சு, இன்னமும் உன் அத்தான் பச்சைத் தண்ணி